வருந்துவோம் திருந்துவோம்

இயற்கையை அழிக்கும்
பாவத்திற்கு
முடிந்தவரை தேடுவோம்
பரிகாரம்.
பொட்டல் காடு எல்லாம்
விதைகள் ஊன்றி வைப்போம்;
காலி இடங்கள் எல்லாம்
மரங்கள் வளர்ப்போம்
இன்னும் சில ஆண்டுகளில்
மழைப் பொழிவு உயரும்*
தகிக்கும் வெப்பம் அதிகரிக்கும்#
உயரும் கடலோர நீர்மட்டம்^
முடிந்தவரை கடைசி
இரண்டையும்
குறைத்திட முயல்வதே
அறிவுடமை.

வருந்துவோம் திருந்துவோம்
வாழ்வளிக்கும்
இயற்கை அன்னையைப்
போற்றுவோம் பேணுவோம்
வருங்காலம் சிறந்திட.

* 7% # 3.1 டிகிரி ^ 65 செ.மீ

நன்றி: முனைவர் இராமச்சந்திரன், காலநிலை மற்றும் ஒத்துப்போதல் ஆய்வுத்துறை, அண்ணா பல்கலைக் கழகம்.
(தினகரன் – 06-12-2013, புதுச்சேரி பதிப்பு)

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (6-Dec-13, 10:19 pm)
பார்வை : 99

மேலே