வண்ணங்களால் அழகான வண்ணத்துப்பூச்சியே

பட்டாம்பூச்சி.....

உன்னை தேடி பூக்கள் வராது
ஆனால், நீ வருவாய் என
பூத்துச் சிரிக்கும் மலர்கள்
புன்னகையுடன் காத்திருக்கும்

பேரழகு எதுவென்று அறிய
ஆசையுடன் வாசல் சென்றேன்
பெண்ணினம் அழகென்று
எண்ணிய சில நொடியில்
பூக்களை அவள் ரசித்தாள்

பூக்கள் தான் பேரழகா என
பூக்களை ரசித்திருந்தேன்
பார்த்த நொடி வெட்கத்தில்
தலை கவிழ்ந்த பூக்கள் எல்லாம்
தலை நிமிர்ந்து ரசித்தது உன்னை

நீதான் பேரழகா?
எப்படி நம்புவது?
நீயும் என் மனம் போல்
நிலையான ஓரிடம் இன்றி
அங்கும்... இங்கும் அலைகிறாயே...!

வண்ணங்களால் அழகான
வண்ணத்துப்பூச்சியே
எண்ணங்களால் அழகாவது
எப்படி என்று கூறிச்செல்...!

=========
கதிர்மாயா

எழுதியவர் : கதிர்மாயா (6-Dec-13, 11:27 pm)
சேர்த்தது : கதிர்மாயா
பார்வை : 158

மேலே