என்னை கொள்ளாதே
சுற்றி வரும்
பூமி உன்
விழியை கண்டால்
சுற்றாமல்
நின்று விடுமே..
வட்டமிடும்
வண்டுகள் உன்
விழியை கண்டால்
மலர்களை
மறந்து விடுமே..
பறந்து செல்லும்
பறவை உன்
விழியை கண்டால்
பறப்பதை
மறந்து விடுமே..
கூவுகின்ற
குயில்கள் உன்
விழியை கண்டால்
கூவுவதை
மறந்து விடுமே..
நீந்தி செல்லும்
மீன்கள் உன்
விழியை கண்டால்
நீந்துவதை
மறந்து விடுமே..
மொட்டு இடும்
மலர்கள் உன்
விழியை கண்டால்
மலர்வதை
மறந்து விடுமே..
அன்பே உன்
ஒரு விழி பார்வையால்
என்னை கொள்ளாதே

