துயர்சொல்லா தொப்புள்கொடி
வாயாற வைந்துவிட்டு
வைக்கிறேன் எனசொல்லி
வைக்காமல் தொடர்கிறேன்
தொலைபேசி அழைப்பினை....
அழைப்பினை துண்டிக்காமல்
அலுப்பினை சொல்வாளென....!
" ஆண்டவா எம் புள்ளைக்கு
அங்க என்ன கஷ்டமோ "
அலைவரிசை தொலைந்துவிட்டது-
அழுகுரல் அவளை சேரும்முன்...!
தொப்புள்கொடி தூரத்தில்
துயரம் மறைத்தவள்
தொலைதூர வாழ்விலும்
துயர்சொல்ல மறுக்கிறாள்...