ஆக்கை இன்றிச் செல்கின்றேன்

வெய்யிலில் இருந்து
நிழலுக்கு வாழ் நிழலின்
நீரிசைக்கு என்னை
குருட்டில் இருந்து
இருட்டுக்கு வழி நடத்தும்
குறுகிடும் யோனி வழி
ஆக்கையே இல்லாமல்
நான் செல்லுகிறேன்.

பரந்ததாய் உயர்ந்ததாய்
கூடுபோற் தோற்றமுடைய
மண்டபக் கூரையின் கீழ்
கடல் வயிற்றினைத்
தொடுகிறேன் நான்
என் வயிறு கொண்டு.

என்னுடலை நான்
முன்னும் பின்னும்
கூர்ந்தாய்வு செய்கிறேன்
உணர்ச்சி உள்ளதாவென
அழுத்திப் பார்க்கிறேன்.
நான் இன்னும்
உயிரோடு இருக்கிறேன்..

(ப்ளான்கா வர்தா ஸ்பானிஷ் மொழியில் ”ஐ கோ பாடிலெஸ்” என எழுதிய கவிதையின் மொழியாக்கம்.)

எழுதியவர் : தா. ஜோசப் ஜூலியஸ் (9-Dec-13, 4:51 pm)
பார்வை : 78

மேலே