உழுதிட்ட மக்கள்
காட்டை கழனியாக்கி
நெடு வயல் கண்டு
நீர் பாய்ச்சிய
விதை நிலங்கள் எல்லாம்
விலை நிலங்கள் ஆக...!!!
சேற்றில் கால்வைத்து
உழுதிட்ட மனிதரெல்லாம்
உழவுதொழிலை மறக்க
ஏற்றம் இறைத்த
கிணறுகளெல்லாம்
கேட்பாரற்று கிடக்க ....!!!
முற்றிய மணிகொண்டு
தலைசாய்க்கும்
நெற்கதிர்களை மறந்தே....!!!
நாற்று நட்டும் களைபறித்தும்
நாட்டுப்புற பாடல்களை
ஆடி பாடி மகிழ்ந்திட்ட
நங்கைகள் எல்லாம்
நற் கலைகளைமறந்தே....!!!
கரும்புதனை வெட்டிசாய்த்து
கனிசாறுஎடுத்தே
சுவைத்திட்ட நாட்களை
சுகமாய் எண்ணி ....!!!
நாளும் வாழ்தல் வேண்டி
ஊரு விட்டு ஊரு சென்றே
கல்சுமந்தும் மண்சுமந்தும்
கனத்த இதயத்துடன்
காலமகள் கண் திறப்பாள்என
காத்துக்கிடக்கின்றனர்
கண்ணீருடன் .....!!!