துப்பாக்கி பேசுகிறேன்

அழிவுக்காய்,
ஆக்கப்பட்டவன் நான்,

நாயும் நானும்,
ஒன்று,
யார் கையில்,
இருக்கிறேனோ,
அவனுக்கே விசுவாசி,

வீரனுக்கும் என்னை,
கண்டால்,
பயம் வரும்,
கோழை கையில்,
நானிருந்தால்,
அவனுக்கும்,
துணிச்சல் வரும்,

காதலுக்கு,
அடுத்ததாய்,
இதயம் வரை,
நுழைபவன் நான் தான்,

என்னை படிக்க,
கல்வி கூடமும்,
வந்தது,
என்னை தயாரிக்க,
தொழில் சாலையும் உள்ளது,

மரண ஓலத்தில்,
என் மகிழ்ச்சி,

நல்லவன் கெட்டவன்,
நான் பார்ப்பது இல்லை,
பார்த்திருந்தால்,
காந்திக்கு நான்,
கருணை காட்டி இருப்பேன்,

கேடு கெட்ட,
சமுதாயத்தின்,
செல்ல பிள்ளை நான்,

எனக்கு எதிரி,
நான் தான்,

துப்பாக்கி பாதுகாப்பில்,
இருக்கும்,
பிரதமருக்கும்,
பயம்,
துப்பாக்கிக்கு தான்,

என் மரணம்,
பிறர்,
உயிர் காக்கும்,

சமாதன,
வெள்ளை புறாக்கள்,
பல,
என் தோட்டாக்கு,
பலி,

தெய்வம் படைப்பு,
மனிதன்,
மனிதனில்,
சில சாத்தான்,
படைப்பு நான்,

ரத்தத்தில் தான்,
என் தின குளியல்,

நான் கொல்ல,
வேண்டிய,
தீவிரவாதி,
என்னை கொண்டு,
நல்லவர்களை,
கொல்கிறான்,

எமனுக்கு என்,
மீது மட்டும்,
இரக்கம்,

கெட்டவனும்,
நல்லவன் ஆகும்,
போது,
நான் மரணிப்பேன்.

எழுதியவர் : கார்த்தி (9-Dec-13, 3:47 pm)
பார்வை : 131

மேலே