ஆஹா அருமை
வரைய தெரியாவிட்டாலும்
ஓவியம் வரையும் மேகம்
இசைக்க தெரியாவிட்டாலும்
முழக்கம் கொட்டும் இடி
பேச தெரியாவிட்டாலும்
நேசமாய் தொட்டுபோகும் தென்றல்
மௌனமாய் சூரியனோடு
காதல் கொள்ளும் சூரியகாந்தி பூ
வெளியில் தெரியாவிட்டாலும்
மண்ணோடு உறவுகொள்ளும் மழை
பகைக்க தெரியாததால்
ஒற்றுமையாய் வாழும் மரம்செடிகொடிகள்!