உலக மனித உரிமை நாள் - டிசம்பர் 10

உலக மனித உரிமை நாள்
உலகம் அறியவேண்டிய நாள் !

உலக மனித உரிமை நாள்
உள்ளங்கள் உணரவேண்டிய நாள் !

அத்துமீறல் உச்சத்தை தொட்டால்
அனைத்துலகம் இணையும் நாள் !

தனிமனிதன் உரிமை பறிக்கப்பட்டால்
தரணியே பொங்கி எழ வேண்டிய நாள் !

இனம் ஒன்று அழிக்கப்பட்டால்
இதயங்கள் ஒன்றிட வேண்டிய நாள் !

கருப்பு இனம் ஒடுக்கப்பட்டதால் பொங்கிய
கருப்பு வைரம் மண்டேலா வீரவணக்க நாள் !

அறிந்திடுங்கள் விவரமாய் உங்கள் உரிமையை
காத்திடுங்கள் தனிமனித உரிமையை என்றும் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (10-Dec-13, 9:52 pm)
பார்வை : 382

மேலே