ஏக்கம்

பயணித்த நிமிடம் ஒருமுறை
ஜன்னல் ஒர காற்றில் மயங்கினேன் இதமாக...
குடைக்குள் ஒழிந்த முகம்
தெரிந்தது இதழ்கள் மட்டும்...
மிதமான வேகத்தில் பயணித்த பேருந்து
திரும்பி பார்கிறேன் மீண்டும்
தெரிந்தது அவள் முகம் ஒரு பக்கமாக ....
யாரென்று பார்க்க பயணித்தேன்
மறுநாளில் ...
எட்டிபார்க்க ஆர்வம் அவள் யார் என்று
வரவில்லை அன்று ...
மறுநாளும் சென்றேன் வரவில்லை
தொடர்ந்தது என் பயணம் அவளுக்காக,
எதிர்பாராத நிமிடம் கண்டேன் குடையினை ...
அருகில் அமர்ந்தால் குடையினை மடக்கிக்கொண்டு .....
தாவணி என்மேல் உரசியபடி....
கிடைத்த நிமிடம் வார்த்தைகள் வரவில்லை
அவள் தாவணி சரிசெய்தால்
மன்னிப்பு கேட்ட அவள் மனது
கேட்க துடிக்கிறது எனக்கும் மீண்டும் அவள் தாவணி என் மேல் படவேண்டும் என்று .....

எழுதியவர் : (11-Dec-13, 1:24 pm)
Tanglish : aekkam
பார்வை : 122

மேலே