எழுதி மறைத்தது
நான் மிகவும் விரும்பிய
அதிகமாக வெறுத்த
நிதர்சன நினைவுகள்
நூலில் வீழ்ந்த சிக்கலாய்
கறுப்பை வெள்ளையாக்கும்
முயற்சியில் கல்வியனைத்தும்
காண்பவர்க்கு வேடிக்கையாய்
கருத்தில்லா காவியமாய்
சுரத்தில்லா ஓவியமாய்
ஓடிபிடித்தும் எட்டவில்லை
ஒய்யார நினைவுகள்
ஊரடங்கியும் வெள்ளிசிதறும்
விழாகால இரவுகள்
அன்பென்று அருகிலிருக்க
வம்பென்று விலகி வழிகொடுக்க
அம்பாகி அடிமனதில் வடுகொண்டு
வீம்பாக வீழ்த்தி செல்வது விதியோ
துடைத்திட கரம் துண்டித்து தந்தாய்
நடந்திட பாதை நாளொன்று அமைத்தாய்
அகிலமே இங்கெனக்கு அழகாய்த் தெரிய
கண்ணிரண்டை குருடாக்கி கனவென்றாய்
கற்பனை கலைத்து நிஜ நிழலை பிரித்து
இங்கிதமாய் வலிஎடுத்து விதி முடித்தேன்
விருப்பமில்லையானாலும் விவகாரமில்லாமல்
வீழ்பட்டு கிடந்தது காலத்தின் நியதி
விசாரணைக்கு வீதியமைக்கலாம்
வீழ்ந்தது நானென்றால்
கர்வம் கொண்டு எட்டி மிதித்தாய்
கண்ணியமாய் நான் தடுத்தேன்
வீழ்ந்து கிடப்பதெல்லாம் வீதிஎன்றாய்
நடந்து செல்வதெல்லாம் பாதைஎன்றாய்
உயர்ந்ததெல்லாம் மரமென்றாய்
பகுத்தறிய பாழ்பட்டு போனாய்
பருவமென்னை பழிபோடும்
பைத்தியமென்றே முகம்தூவும்
கல்லொன்றை செதுக்கி
காலமெல்லாம் உன்னுள்ளே
கலங்காமல் நானிருப்பேன்
என்கவிக்கு நீ கருவாகும்வரை ......