கர்ப்பத்தின் அருமை
பத்துமாத கர்ப்பத்தை சுமந்து
மறுபிறவி எடுத்து
பூப்போல குழந்தையை
உலகுக்கு தரும்
தாய்மை குறித்து
அலட்சியமாக நினைக்கும்
ஆண்களுக்கு......
இறுக்கிப்பிடிக்கும்
பேண்ட் அணிந்து
கழுத்தை அலங்கரிக்கும்
டை மாட்டி,
வெள்ளைக்கார துரை போல
காலில் ஷூ மாட்டி,
எப்போதும் கைக்குட்டை சகிதம்
வேர்வை தெரியாத
குளிர் அறையில் இருக்கும்
இருக்க நினைக்கும்
ஆண்களுக்கு....
பெண்களின் கர்ப்பகால
கஷ்டம் எங்கே தெரியப் போகிறது??
வெளியில் தண்ணீர்க் குடம் சுமந்து
வயிற்றுக்குள் பனிக் குடம் சுமந்து
பொத்தி பொத்தி பார்த்து பார்த்து
வளர்க்கும் கர்ப்பத்தின் அருமை
தெரியுமா என்ன??