பெண்சிசு
ஒரு அழகிய கிராமம் ... குயில் பாட்டு இசைக்க .. அதற்க்கு ஏற்ப மரங்கள் நடனம் ஆட ...குழந்தைகள் எல்லாம் வீதியில விளையாட..எல்லோரோட வீட்டுக்கு முன்னாடியும் அழகான கோலம். வேற.. பெண்கள் எல்லாம் கூட்டம் கூட்டமா பேச... விருந்தோம்பல் குறையாம... அன்னைக்கு பாத்த மாதிரி இன்னைக்கும் அழகா ஒரு கிராமம் .. இது மட்டும் இல்ல பழைய மூடநம்பிக்க .. கலாச்சாரம் பெண்சிசு குலையும் இருந்துச்சு .. இந்த கிராமத்துல.. இந்த கதை இந்த அழகான கிராமத்த பத்திதான்.....
கவித்தா நம்ம கதையோட கதாநாயகினு சொல்லலாம்... இவளோட கணவன் பெயர் சுரேஷ்.. கச்டபட்டவுங்க கவித்தாவும் சுரேஷும்..அனாலும் சந்தோசமா தான் வாழ்ந்தாங்க... நல்ல போன இவுங்க வாழ்கையில ஒரு சந்தோஷமான விஷயம் நடந்துச்சு அதான் கவித்தா மாசமானது... ரொம்ப சந்தோசம் நம்ம சுரேஷுக்கு ஒவ்வொரு ஆண் மகனுக்கும் இது தான பெரிய சந்தோசம் .. நல்ல இருந்த கடலுல புயல் வீசுன மாதிரி அந்த ஊர்காரங்க பெண் குழந்த பிறந்தா என்ன பண்ணுவ நீ படுற கச்டதுக்குனு, கேட்டாங்க தெளிவா இருந்த சுரேஷோட மனச கலச்சுட்டாங்க... அவனால நிம்மதியா இருக்கமுடியல ஒருவேள பெண் குழந்த பிறந்தா எப்படி வழக்க எப்படி அவல கர சேக்கனு பயப்பட அரமிச்சுட்டான்... அவகிட்ட உனக்கு என்ன குழந்த வேணும்னு கேக்க, அவளும் மூத்தது பொண்ணா இருந்தா நல்லா இருக்கும்னு சொன்னா.. அவனோட தூக்கம் தொலஞ்சு போச்சு .. இவன் அடிக்கடி டாக்டர் என்ன குழந்தைனு சொன்னாருன்னு கேக்க ஆரமிச்சுட்டான் .. இவளுக்கு சந்தேகம் வந்துருச்சு ..நமக்கு பெண் குழந்த வேண்டாம்னு வேற சொல்ல அரமிசுட்டான் .. டாக்டர் பெண் குழந்தைனு சொல்லிட்டாரு. இவளுக்கும் என்ன பண்ணணு தெரியல 9 மாதம் முடிஞ்சுது இதுவர மறச்சுட்டா, டாக்டர் தேதியும் சொல்லிட்டாரு .. அன்னைக்கு தான் அவ ஒன்னு யோசிச்சா. ஊர்கரங்கலாலா நம்ம புருசனோட மனச மாத்த முடிஞ்சா ஏன் நம்மால முடியாதுன்னு .. அன்னைக்கு நைட் அவ புருஷன் கிட்ட போய் . நமக்கு ஏங்க பெண் குழந்த வேனானு கேக்க.. அவன் சொல்றான் நம்மால வச்சு காப்பத முடியாதடினு .. ஏங்க அப்படி நினைக்கீங்க .. அப்படி உங்க அம்மா வீட்ல நினச்சுருந்தா நீங்க இங்க இல்லங்க நானும் இங்க இல்லங்க.. ஏங்க நம்மால முடியாது எனக்கு உங்க மேல நம்பிக்க இருக்குங்க உங்களால முடியும் நமக்கு பொண்ணு பொறந்த ராணி மாதிரி நீங்க வழப்பீங்கனு.. இந்த ஊர்காரங்க முன்னாடி நாம வாழ்ந்து கட்டுவோம்ங்க உங்கட்ட சொன்ன ஊர்காரங்க மூக்கு மேல விரல் வைக்குற மாதிரி.. கடைசி வர உங்க கூட உங்க கஷ்டத்துக்கு துணையா உங்க சந்தோசத்துல பாதிய நான் இருப்பேங்கனு சொல்ல அவன் அழ அரமிசுட்டான் .. அதே மாதிரி பெண் குழந்தையும் பிறந்துச்சு இவுங்களும் சந்தோசமா வாழ்தாங்க.........