என் பாட்டி

நான் பிறந்ததும் என்னோட பாட்டி
(அப்பாவோட அம்மா) என்னை மடியில் எடுத்து வைத்து கொஞ்சலயாம். பிறகு எப்போதோ பாட்டிக்கு என்னை பிடித்திருக்கிறது. பால்ய காலத்தில் ஒவ்வொரு கோடை விடுமுறையும் பாட்டியிடம் கழிந்தது. பாட்டியின் ஊரில் எனக்கென்று தனிய நண்பர் வட்டம். காலை சமையல் முடித்து வேலைக்கு போவாள் பாட்டி , பொழுது முடிந்து தான் பார்க்க முடியும், வரும் போது கண்டிப்பாக சாப்பிடுவதற்கு எதாவது வாங்கி வருவாள். டீ யோடு வறுக்கி தொட்டு சாப்பிடும் பழக்கம் பாட்டியிடம் இருந்து வந்தது. முதல் முறை பணம் கொடுத்து பழக்கியதும் பாட்டி தான். கடந்த ஆண்டு கால் வலி யென படுக்கையில் கிடந்தவள். மெதுவாக தான் தெரிந்தது பாட்டிக்கு எலும்பு புற்றுநோய் யென , எங்கள் வீட்டில் ஆறு மாசம் இருந்தாள். வலி வலி யென கதறும் பாட்டியின் கண்களை பார்க்க பயமாக இருக்கும். பிறகு சில மாதங்கள் அத்தை பார்த்து கொண்டாள். அம்மா அடிக்கடி போய் பாட்டியை பார்த்து விட்டு வந்து சொல்லும் விஷயங்களே அதிர்ச்சியாய் இருக்கும். நேரில் சென்று பாட்டியை பார்த்து வர கொஞ்சம் பயப்பட்டேன். கடந்த பிப்ரவரி மாதம் பாட்டி போய் சேர்ந்தாள். என் வாழ்க்கையில் திரும்ப அனுபவிக்கவே பயப்படற நாட்கள் பாட்டியோடு சடங்கு நாட்கள். அப்போ யெல்லாம் யென பாட்டி ஆரம்பிக்கும் அனுபவ கதைகள் யெல்லாம் நெருப்போடு போனது. இனி பாட்டியே பார்க்கவே முடியாது பாட்டியோட அன்பு இனி கிடைக்கவே செய்யாது. பாட்டியில்லாத தனிமை எப்போதும் வலி மிகுந்தது. இனி பருவகாலத்தில் காய்த்து தொங்கும் மாங்காய்களை பறிக்க பாட்டியின் வீட்டில் ஆளில்லை.

எழுதியவர் : m.palani samy (15-Dec-13, 9:21 am)
Tanglish : en paatti
பார்வை : 208

மேலே