கற்றது - ஒரு பக்க கதை
கற்றது - ஒரு பக்க கதை
***************************
1990
வினோத், ஆசிரியர் மறுநாள் எழுதிக் கொண்டு வரச்சொன்ன
பொதுக்கட்டுரையை எழுதி முடித்து விட்டு நிமிர்ந்தான்.
பின்னால் நிழலாடியது ராகுல்!
-
“வினோத் சார் சொன்ன கட்டுரை எழுதிட்டியா?’
-
“முடிச்சிட்டேன் ராகுல். ஆமாம், ஒவ்வொரு முறையும்
அடுத்தவங்க கட்டுரையை காப்பியடிச்சி எழுதிக்கிறே. நீயா
முயற்சி செய்து, கற்பனை பண்ணி எழுதலாமே?’
-
“அடப்போடா!… சுயமா எழுதறதெல்லாம் எனக்கு சரிபட்டு வராது.
அடுத்தவன்கிட்டே வாங்கணுமா, காப்பி அடிச்சம்மா.. முடிஞ்சது
வேலை! கற்பனை அது இதுவெல்லாம் உனக்குத்தான் வரும்.’
-
2013
-
“டேய், வினோத்! பார்த்து ரொம்ப நாளாச்சு. நல்லா இருக்கியா?
என்னடா பண்றே?’ – ராகுல் கேட்டான்.
-
“அனிமேஷன் கோர்ஸ் முடிச்சிட்டு பெரிய கம்பெனியிலே
வேலையில் இருக்கேன்டா!’
-
“அனிமேஷன்னா?’
-
“கற்பனையா மனிதர்களை, விலங்குகளை கம்ப்யூட்டர்ல
உருவாக்கி நடிக்க வச்சி படமெடுக்கிறது!’
-
“அப்படியா?’
-
“ஆமாம். ராகுல் நீ என்னடா பண்றே?’
-
“ஜெராக்ஸ் கட வச்சிருக்கேன்!’
-
————————————-
- ஜெயாமணாளன்