நீ உள்ள வரை

வாழ்க்கை என்பது
உயிர்கள் இருக்கும் வரை ?
சுவாசங்கள் என்பது
காற்றுக்கள் இருக்கும் வரை ?
மணங்கள் என்பது
மலர்கள் இருக்கும் வரை ?
ஓடைகள் என்பது
திவலைகள் இருக்கும் வரை ?
பகல்கள் என்பது
சூரியன் இருக்கும் வரை ?
ஆழகுகள் என்பது
கண்கள் இருக்கும் வரை ?
கனிகள் என்பது
சுவைகள் இருக்கும் வரை ?
அன்பே ,
இங்கு
நான் என்பது
நீ இருக்கும் வரை ..........