விழுதுகள் இல்லா மரமாய்
விழுதுகள் இல்லா மரமாய்....
விழுந்து போனததடி - என் மனது....
பொன் வேண்டாம் ... பொருள் வேண்டாம்...
பூ மகளே ... உந்தன்
ஒரு வார்த்தை போதுமடி...
பேதை எனக்கு....
சொல்வாயோ...? கொல்வாயோ ...?
தெரியவில்லை... என்றாலும் சொல்கின்றேன்....
கேட்டுக்கொள் ..... நீ
இல்லா வாழ்வு அது தேவை இல்லை.....
என் காதல் வென்றாலும்
விழ்ந்தாலும் கவலை இல்லை ...
என் நெஞ்சில் நீ என்றும் வாழ்ந்திடுவாய்...