வளர் பிறை-16

வண்டியின் கோளாறு சொல்ல போனவன்,,,,, சிலையானான்,,,,, காரணம் ஜோதி டாக்ஸியில் இல்லை


"எங்க போனுச்சு இந்த பொண்ணு"

"பாப்பா,,,,,,,, பாப்பா,,,,,,,,,,," கூவிப்பார்த்தான் ,,, எந்த திசையிலும் அந்த பதிலும் இல்லை,,,

செல்வத்திற்கு குழப்பமாக இருந்தது,,,,,

"எங்க போயிருக்கும் இந்த பொண்ணு,,,,,,,"- அவன் யோசித்து கொண்டிருக்கும்போதே,,,,,,,, இருட்டிலிருந்து வெளிப்பட்டது அந்த உருவம்,,,,,,


"யாரு யாரது???"- பயத்தில் கேள்விகளை அடுக்கினான் செல்வம்

அந்த உருவம் அவன் அருகில் வந்தது,,,,,,,,,

"நீ,,,,,,,,,, நீ,,,,,,,,,"- அவன் சொல்லி கொண்டிருக்கும்போதே அவன் கன்னங்களில்,,,,

"பளார்,,,,,, பளார்,,,,,, பளார்,,,,,,,,,"- அடிவிழுந்தது


அறை ஒவ்வொன்றும் அவ்வளவு கொடூரமாக இருந்தது


அந்த அறையில் உட்சம் செல்வம் மயக்க நிலைக்கு போனான்,,,,,,,,,,,,,,




அவன் கண் விழித்து பார்த்த போது,,,,,

ஒரு அறையில் நாற்காலியில் கட்டிவைக்கப்பட்டிருந்தான்,,,,,,,,,,,,, அவன் கைகள் கட்ட பட்டிருந்தன

அந்த அறையின் இருட்டில்,,,,, ஏதேதோ சத்தத்திற்கு நடுவில் பயந்து அமர்ந்திருந்தான் செல்வம்,,,,,,, எங்கிருந்தோ வந்த சிறு வெளிச்சத்தில்,,,,,,,,,,

அவன் அருகில் யாரோ இருப்பது போல உணர்ந்தான்,,,,,,,, அது யாராக இருக்கும்,,,,,, கூர்ந்து பார்த்தான்

"தினா"- ஆம்,,,,,, தினகரன் தான்,,,,,,,,

தினகரன் மயங்கிய நிலையில் இருந்தான்,,,,,,, எதோ விபரீதம் நடக்க போகிறது என்று மட்டும் புரிந்தது செல்வத்திற்கு


அந்த சமயம் அங்கு வந்தது அந்த உருவம்,,,,,,,, செல்வம் புதரில் பார்த்தனே அதே உருவம்,,,,,,,

அந்த அறையின் சிறு வெளிச்சத்தில் அந்த உருவத்தின் முகம் தெரிந்தது,,,,,,, அது ரகு

ரகுவுடன் ஜோதி மற்றும் அவளின் தந்தை குணசேகரன்,,,,,,,,

செல்வத்திற்கு சகலமும் ஆடிப்போனது,,,,,,

"யார் நீங்க என்ன எதுக்காக இங்க கட்டி போட்டுருகீங்க"- கேட்டான் செல்வம்

"ஜெனிய ஏன் டா கொலை செஞ்சீங்க"- ஆக்ரோசமாக கேட்டான் ரகு

"ஜெனிய நான் கொல்லல தீனா தான்.,,,,,,,,,,"- அவன் சொல்லி முடிப்பதற்குள் அவன் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது


"இந்த கதையெல்லாம் என்கிட்டே விடாத நீ யாரு உன் தொழில் என்ன எல்லாம் தெரிஞ்சிதான் உன்னை தூக்கிருக்கேன்"- கோபத்தில் எரிமலையாக வெடித்தான் ரகு

",,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,"- செல்வத்திடம் அமைதி

"ம்ம்ம் சொல்லு டா அந்த பச்ச புள்ளைய கொல்ல உங்களுக்கு எப்டி டா மனசு வந்தது"- கோபமும் கண்ணீருமாய் கேட்டான் குணசேகரன்

மௌனத்திற்கு பின்,,, செல்வம்,"தினாக்கு ரொம்ப நாளா அந்த பொண்ணு மேல ஒரு கண்ணு அவ தனியா இருக்கும்போது அவளை அடைய நெனச்சான்,,,, அப்போ அந்த பொண்ணு செத்து போய்டுச்சு,,,,,, என்ன பண்றதுன்னு என்கிட்ட உதவி கேட்டான்,,,,, நானும் என் வண்டில அந்த பொண்ணோட பொணத்த கொண்டு போய் நானும் தினாவும் பொதச்சிடோம்"- சொன்னான் செல்வம்

"ஓ,,,,,, இது தான் நடந்துதா??"- கேட்டான் ரகு

"ஆமா"- சத்தியமே செய்தான் செல்வம்

"அப்போ அன்னைக்கு அங்க வேற எதுமே நடக்கல,,,, அப்படி தானே"- கேட்டாள் ஜோதி

"ஆமா மா உண்மையா அந்த பொண்ணோட முகத்த கூட நான் பாக்கல,,,,,,,, அவளை துண்டு
துண்டா வெட்டி தான் தீனா கொண்டு வந்தான்"


அவன் சொல்லி கொண்டிருக்கும் போதே அவனுக்கு அறைகள் பலமாக விழுந்தது

"பொய் சொல்ற நாயே"- குணசேகரன் சீறி எழுந்தார்

"அப்பா நீங்க டென்ஷன் ஆகாதீங்க இவங்ககிட எப்படி உண்மைய வரவைக்கிறது என்று எனக்கு தெரியும்"- சொன்னாள் ஜோதி

சென்று ஒரு ஊசி எடுத்து வந்து கட்டி இருந்த செல்வத்தில் கையில் செலுத்தினாள்

"என்ன என்ன,,,,,,, ஊசி??"- அலறினான் செல்வம்

அவன் கேட்டு முடிப்பதற்குள் முழு மருந்தையும் அவன் கையில் செலுத்தி விட்டாள் ஜோதி

"இதோ பாரு உனக்கு போட்டுருக்கது விஷ ஊசி,,, நீ உண்மைய சொல்லிடனா உனக்கு மாத்து மருந்து
ரெடியா இருக்கு அத போட்டு உன்னை காப்பாத்துறேன்,,,,,,,, இல்ல அப்படியே செத்து போன்னு விட்டுவுவேன்"- மிரட்டினான் ரகு

"சொல்லிடுறேன்,,,,,,,,,, உண்மைய சொல்லிடுறேன்,,,,,,"- அலறினான் செல்வம்


(வளரும்,,,,,,,,,,)

எழுதியவர் : நிலா மகள் (16-Dec-13, 4:12 pm)
பார்வை : 173

மேலே