என்ன ஆனது

படம்தானே பார்க்கிறேன்
படம் கூடப் பேசுமோ!
என்னையே பார்ப்பது போல்
ஈர்ப்பதென்ன இரசாயனம்!

எனக்குள் என்ன ஆனதோ!
ஏதோ ஒன்று தோணுதே!
உனக்கும் எனக்கும் என்னவோ!.
ஊறி ஏதோ வழியுதே!

சொல்ல ஒண்ணு முந்துதே!
சொல்லாமலே நிற்குதே!
எண்ணங்கள் தொலைந்ததோ!
என்னை உயிர் மறந்தததோ!

ஒவ்வொன்றாய் தேடுது.
ஊன்றி அதில் கூடுது.
எவ்விடமும் பழுதில்லை
எழுந்து கைகள் தொழுகுது.

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ .பி.அய்யா. (16-Dec-13, 6:12 pm)
Tanglish : yenna aanathu
பார்வை : 221

மேலே