கருவறையில் நீ தான் தாயே
கருவறையில் நீ தான் தாயே .......
நான் கருவறையில்
இருக்கையில் ,
என் தாய் பெற்ற இன்பம்
என்னவென்று எனக்குத்தெரியாது !
ஆனால்
என்னை தாயக்கப் போகிற
என் குழந்தையை
கருவறையில்
சுமந்து கொண்டு உணர்கிறேன் (சொல்கிறேன் )
எந்தன் தாய் பெற்ற இன்பத்தை !
காரணம் ,,,
என்னை,
என் தாய் பெற்றெடுத்தாள் ..
என் தாயை,
நான் பெற்றெடுக்கப் போகிறேன் :-)
வலியாய் அல்ல வரமாய் ....
----- k.k.பாலசரஸ்வதி