விவாகம்

விவாகம்..

தன்நிலை அறிந்து விவாகம் செய்ய
துணை தேடுதலை விடுத்து ...இயலுமென
துணிந்து மணமேற்றபின் இல்லற சுகம்
தழுவும் நாட்டமிலையென நழுவாதே.
..........
ஆன்மீக நாட்டம் அதீதமாகிய மனது
இல்லறத்தில் நிலைத்திடுமென அசையா...தொடர்உறுதி
ஆத்மார்த்தமாய் உண்டெனில் விவாகம் நாடி
இல்வாழ்வில் நுழைந்திடு துணிந்து.
..........
விவாகம் வேண்டா இல்லறசுகம் வேண்டா
பண்புடைய அதீதஆன்மீக நாட்டம்...கொண்டோர்
ஒத்தமனதுடை துணைவாய்க்காது மணமேற்கா விரதம்
எத்தருணத்திலும் கைவிடாமை சாலச்சிறப்பு.
.........
விவாகம் செய்ய மணமாலையிடும் உரியவரிடம்
விவரமாய்பொருள் கேட்டுவாங்கல் சரியென்று ... திமிர்
விளையாட்டுத் தனமாய் இயங்குதல் ஆண்மை
விதியென்று முழங்கித் திரியாதே.
(ஆண்மை = வீரம்)
..........
விவாகம் வேண்டுவோர் வேண்டும் பொருள்
தரஇயலுமாவென சிந்தித்து சுயதகுதி ... அலசிஆராய்ந்து
கௌரவம்நீக்கி நடத்தும் திருமணத்தால் தவிர்க்கப்படும்
கடன்பட்டு கலங்கும் நிலை.

...... நாகினி

எழுதியவர் : நாகினி (16-Dec-13, 8:05 pm)
சேர்த்தது : Nagini Karuppasamy
பார்வை : 89

மேலே