மழை
நிலமங்கையின் மகளாகிய பயிர் வாடிவிட்டது!
வைத்தியம் பார்ப்பதற்கு
ஆண்டவன் அருள்செல்வத்தை
பூமிக்கு அனுப்பினான்!
என்றோ விடியல் என ஏங்கும் விதைகளுக்கு
வண்ணமிகு வாழ்வை வழங்கும்
வான் அமிர்தம் நீ!
தேனெடுக்கும் வண்டு
தேம்பாவணி பாட
இடியோடு இசைஇசைக்கும்
இசைத்தமிழ் நீ!
வறட்சியை வேரோடு அகற்றி
பசுமை கம்பளத்தை விரிக்க
பாய்ந்தோடிய
பாரி வள்ளல் நீ!
தாகத்தால் நாவறண்டு தவிக்கும்
மக்கட்கு தாவி வந்து
தாங்கும் தாய் நீ!
பெருமழையாய் இல்லாமல்
பெருந்தகையாய் நீ வளர
என்றென்றும் விரும்பும்
இளந்தளிர் நான்!

