இன்றோடு முடிகிறது என்னொரு உதயம்
இன்றோடு முடிகிறது இ(எ)ன்னொரு உதயம்
நெஞ்சோடு வலிக்கிறது நினைவுகளின் காயம்
உனை நினைத்த பொழுதுகளெல்லாம் - இனி
உரை எழுத முடியாத செய்யுள்களாய்
தனம் எதற்கு எனக்கு?
சினம் கொண்டு ஏங்குகிறது - உன் பிரிவின்
கனம் தாங்க முடியாத என்மனது...
விடைபெறும் பொழுதுகளில்
விழி நிரம்பி உடைகின்றது
அணைகடந்த மழைகால வெள்ளம்போல்
ஆதரவாய் சாய்ந்த தோள் - இன்று
காத தூரம் சென்றதுவோ - நீ
கனிவாய் பேசிய மொழிகள் மட்டுமே
செவிக்கு இனி சங்கீத ஸ்வரங்களோ...
அடைமழை நாளில் ஆதவன் வரவுநோக்கும்
தாமரை நிலைதான் எந்நிலையோ!!!
ஆதரவில்லா பாலைவனத்தில் நிழலுக்கு
தாவரம் தேடச்சொல்வது என் விதியோ?
காத்திருந்த தருணங்களில் உன்னை நினைத்து எனை மறந்தேன்
பார்த்த பின்பு தனிமையில் எனதுள்ளே உனை உணர்ந்தேன்
வார்த்தையெல்லாம் வாழ்க்கையானது உன்மொழியால் - பின்பு
வாழ்க்கையே வார்த்தையானதே உன் கடைமொழியில்
இரவு ஏகாந்தத்தில் இளையராஜாவின் தாலாட்டுகளோடு
என் இதய நார்களில் இசைப்புயல் இசைக்கும் மெட்டுகளில்
இன்னமும் காதல் வாழ்கிறது...
காதலுக்கு முடிவில்லை அதுவே வாழ்க்கையெனில்
வாழ்வுக்கு வடிவமில்லை காதல் அங்கே இல்லையெனில்
உறவின் பெயரோன்றுக்கு இத்தனை உன்னதமா?
மறவாது வாழ எம்மனமும் சம்மதமா?
செடியில் பூத்த மலர்கள் மாலை சிறகொடிந்து போயினும்
கடிதும் சலனமின்றி மறுநாள் காலை மலர்கின்றதே...
முடிவில் மேற்கில் மறைவது அறிந்தும் - சூரியன்
விடியலில் உலகுக்கு விளகேற்றுகின்றதே
கெடிதென பற்றிய வாழ்வின் தடம் என்றும்
நொடிநேர முடிவுகளில் அடிமாறுவதில்லை...
இருந்தும் புரியவில்லை இறந்தகாலம்
இதயத்தோடு கலக்கவில்லை இங்கிதராகம்...!!!