வாழ்த்துக்கள்
சொந்தக் கவிதை -12
இனிய காலைப் பொழுதினிலே
சற்றே பனிபடர்ந்த தெருவினிலே
வரும்நாள் நல்லதென அமைந்திடவே
இறைவனை வேண்டித் தனியே
மகிழ்வுடன் நடக்கின்றான். எதிரேவந்த
புதுமனிதன் கரம்கூப்பி இந்நாள்
தங்களுக்கு நன்னாளாய் அமைந்திட
வாழ்த்துக்கள் எனக்கூறக் கேட்டதும்
கதிரவனை கண்ட தாமரைப்போல்
முகம்மலர்ந்து நன்றி தங்களுக்கும்
நன்னாளாய் அமைய வாழ்த்துக்கள்
என நெகிழ்வுடன் கூறியதும் அவரோ
வாழ்த்துக்கள் உங்களுக்கல்ல பின்னால்வரும்
என் நண்பர்க்கு எனக் கூறக்கேட்டதும்
அனிச்சமலர்போல் வாடியது அவன் முகம்
வாழ்த்துக்கள் எனச்சொல்லி பின்னர்
உங்களுக்கல்ல எனச்சொல்வது முறையோ
கூறிடுவீர் அறிமுகமில்லா நண்பர்களே!
வாழ்த்திட அறிந்தவர் அறியாதவர்
தெரிந்தவர் தெரியாதவர் உடன்பிறந்தவர்
உடன்பிறவாதவர் புரிந்தவர் புரியாதவர்
அவசியமில்லை நல்உள்ளம் வேண்டும்
சரிதானா அன்பு நண்பர்களே
(உண்மையில் நடந்த சம்பவம்)