குழந்தைப் பருவம்

குழந்தையாய் இருந்தபொழுது நினைத்ததுண்டு...

திராட்சை, ஆரஞ்சு கொட்டைகளை முழுங்கி விட்டால் வயற்றுக்குள்ளே மரம் முளைக்கும்

நிலாவில் வடைச்சுடும் பாட்டியின் வாடிக்கையாளர்கள் யாரோ?

காந்தி தாத்தா மிகவும் நல்லவர்!

ஒரே குண்டை வைத்ததற்கு நாலைந்து சிறு குண்டுகளாக வைத்திருந்தால் ஒரு வாரம்
பள்ளி விடுமுறை கிடைத்திருக்கும் ( கோவை குண்டுவெடிப்பு )

காதல் வந்ததும் அனைவரும் வெளிநாட்டில் பாட்டுப்பாடி டூயட் ஆடுவார்கள்

உலகில் மிக கொடூரர்கள் ஊசிப்போடும் மருத்துவர்கள் !!!

இடி இடிப்பது கடவுள் கோபமாக வானத்தில் நடக்கும் சப்தம் !!!

என்ஜினியரிங்கில் சிவில் மட்டுமே பிரிவு !!!

நன் அழும்பொழுதெல்லம் தன் இலைகளை அசைத்து அழாதே என ஆறுதல் சொல்லும்
ஒரே உற்றத்தோழி கொல்லையிலிருந்த என் நெல்லிமரம்!!!

பெரிய கூந்தல் வேண்டும் எனில் இருக்கவே இருந்தது தலையில் சுற்றி கொள்ள
நீளமான துண்டு ..

அந்த பருவம் இழந்திருக்க கூடாத ஒன்று :-(

எழுதியவர் : சரண்யா (18-Dec-13, 9:01 pm)
பார்வை : 95

மேலே