மின்சார சேமிப்பு

திசம்பர் 14 முதல் 20 வரை
................................................
மின் சேமிப்பு வாரம்
....................................
இயற்கை சூரியன் மறைந்த பிறகு
இரவு சூரியன் மின் ஒளிதான்.
இறைவன் நமக்களித்த வரம்
இரண்டு கண் ஒளிதான் .
சூரியன் கூட இரவைத்தந்து மறைகிறது,
கண்கள் கூட விழிப்பை நிறுத்தி
உறங்கச் செல்கிறது.
ஆனால் மின்சாரம் தானே
ஓய்வில்லாமல் ஒளி தருகிறது..!
மேகமும் மேகமும் உரசும் போது'
மின்னலும் இடியும் வருகிறது.
அணுவோ கரியோ எறிந்தால் தானே
தரமாய் மின் ஒளி வருகிறது..!
இரவு முடிந்து ,பகல் வந்தால்
சாலையில் வீட்டில் விளக்கு ஏன் எரிகிறது..?
வெட்டியாய் சுழலும் மின் விசிறியில்
மின்சாரம் ஏன் வீணாகிறது..?
விரல்கள் கொண்டு நிறுத்தும் போது ,
வெற்றியாய் மின்சாரம் குவிகிறது..
குவிந்து கிடக்கும் குப்பையில் கூட
மின்சாரம் பிறக்கிறது.
கூடங்குளத்தில் குழப்பம் வந்தால்
வருங்கால இருள்கள் போகாது.
வளர்ச்சி செடிக்கு வெந்நீர் இட்டால்
வளரும் தலை முறை தளைக்காது .
துளித் துளியாய் சேரும் நீர் தான்
வெள்ளமாக சேர்கிறது.
சிறுக சிறுக சேமித்தால் தான்
பெருகிப் பெருகி மெகாவாட் ஆகிறது.
பொறுப்பாய் மக்கள் மின்சாரம் உண்டால்
வெறுப்புகள் வந்து சேராது.
சிக்கனமாக மனிதன் வாழ்ந்தால்
சிறப்புகள் சிதறிப்போகாது.
இக்கணமே மின் சேமிப்பைத் தொடர்ந்தால்
இந்தியா சோர்ந்து போகாது.
பெண் சிசு ஒழித்தால் போராட்டம்,
கொசுவை ஒழிக்கப் போராட்டம்.,
பசுவை ஒழித்தால் போராட்டம்.,
மின் உலைக்கு ஏன்..போராட்டம்?
சிந்தனைச்சிறகை விரித்திடுங்கள்
சிக்கனம் தேவை விழித்தெழுங்கள்.
பஞ்ச பூதத்தில் ஒரு பூதம்
அக்னி புத்தரன் .அது வேதம்.,
அதன் வழி வந்ததுதான் மின்சாரம்.
அதனை சேமிக்கச் சொல்லி ,
முழங்கிடு பெரு நாதம்.
பைக்காரா போல் பல
நல்ல திட்டம் வேண்டும்
பாரதத்தில் பல மின்சக்தி
பரவுதல் வேண்டும்.
பாது காப்பாய் நம் மக்கள்
பங்கிட்டுப் பயன் பெற வேண்டும்..
பயன் பெற வேண்டும் ....
.
.