நரம்பில்லாத நாக்கே
நரம்பில்லாத நாக்கே நீ
நஞ்சு வார்த்தைகளை உதிர்ப்பது ஏனோ
நல்ல மனங்களை கொள்வதனாலே
உனக்கென்ன பயனோ உணர்ந்திடு நாக்கே ......
எல்லா உயிர்க்கும் இல்லா வரத்தை
இறைவன் தந்தான் உனக்கு நாக்கே
இனிதாய் பேசும் இயல்பை மறந்து
அமில பேச்சு எதற்கு நாக்கே ........
பேசி பழகிட நிறைய கிடக்க
பேசி புரிந்திட நிறைய கிடக்க
ஊசி வார்த்தை எதற்கு நாக்கே
பிறரை ஏசிபழிக்கிறாய் எதற்கு நாக்கே ........
கூடும் கூட்டத்தில் பிறரை பழிப்பாய்
நீ கூட மறக்க உன்னை பழிப்பார்
உணர்ந்து நீயும் செயல்பாடு நாக்கே
பிறரது உணர்வுக்கு நீயும் மதிப்பளி நாக்கே ......
உலகில் உலவும் வம்புக்கெல்லாம்
உன் உளறல்தானே உணரு நாக்கே
சபை அறிந்து பேசிடு நாக்கே
நீ பகைமடிந்திட பேசு நாக்கே ......
உந்தன் மதிப்பு உன்கையில் இருக்கு
உண்மையை நீயும் உணரு நாக்கே
பணிவுடன் நடந்து பக்குவமாய் பேசி
பிறர் பாசத்தை நீயும் பெற்றிடு நாக்கே .......
உன்னால் அழுபவர் ஒருத்தரும் வேண்டாம்
உன்னால் சிரிக்க முயன்றிடு நாக்கே
பொய்மையை பேசி வாழ்க்கை வேண்டாம்
நீ உண்மையைபேசி வாழ்ந்திடு நாக்கே .......
சாக்கடையை வெல்லும் நறுமணம் போலே
நீ வார்த்தையை சிந்தி வாழு நாக்கே
மென்மையாய் பேசிய மனிதர்தானே
நம்மில் மகாத்மா என்பதை உணர்ந்திடு நாக்கே ......