காண்பெதெல்லாம் அழகு

நாளும் பயின்று வளர்வது கல்விக்கு அழகு
ஆரோக்கியம் பேணி காப்பது உடலுக்கு அழகு
உண்மை பேசி நேர்மை பேணுவது
பண்பாட்டிற்கு அழகு
உறவோடு கலந்து உதவுவது ஒற்றுமைக்கு அழகு
சேர்ந்து மகிழ்ந்து வாழ்வது வாழ்க்கைக்கு அழகு
இருந்து பார்த்து தொழில் செய்வது
வியாபாரத்திற்கு அழகு
நம் நாடு,நம் மொழி, நம் மக்கள்,என
என்றும் நல்லது செய்வதே நாட்டிற்கு அழகு.

எழுதியவர் : arsm1952 (19-Dec-13, 12:38 pm)
பார்வை : 103

மேலே