பாலச்சந்திரா

பண்ணிரண்டு அகவை பாலகனே
உன் விழிகளின் அசைவோடு
ஆடாது நிற்கும் ஒளித்திரை
கணினியில் கண்ட புகைப்படம்
கனவினில் வந்து நிழலாட
உறக்கம் கலைத்தது விழிகள் ...

பாலகனே எத்தனை கொடுமை
உன் இழப்பின் துயரம்
தாங்க இயலாது தகிக்கிறேன்.
விழிகள் வாய் காதுகள் கூடிய
முகம் உன் தந்தையின்
அச்சின் வடிவாய் உள்ளாயடா.

பால் மணம் மறையாத
வெள்ளை மனம் மாறாத
உன்னை, துமிக்கி வெடிகள்
துளைத்த உடல் கண்ட நினைவு
படர்ந்த பொழுதெ ல்லாம்
தன்னாலே கசிகிறது கண்ணீர்.

- சு.சுடலைமணி

எழுதியவர் : சு.சுடலைமணி (19-Dec-13, 1:11 pm)
Tanglish : Balachsandra
பார்வை : 76

மேலே