எதிர் வீட்டு ரகுவை மறந்திடு
எதிர் வீட்டு ரகுவை மறந்திடு...!
-
அட...அவனை எப்பவோ மறந்திட்டேன்பா..!
இப்ப பக்கத்து வீட்டு பாலுவைத்தான் நினைச்சுட்டு
இருக்கேன்...!
-
>ராம் ஆதிநாராயணன்
-
-------------------------------------------
-
கட்சி மாறி கார் வாங்கினீர்கள் இல்லே...மறுபடியும்
ஏன் வேற கட்சிக்கு மாறீட்டீங்க?
-
என்ன பண்றது...காருக்குப் பெட்ரோல்லும்
வாங்கணுமே...!
-
>விகடபாரதி
-
------------------------------------------------
-
வன்முறையால சாதிக்க முடியாததை அன்பால்
சாதிச்சுட்டேன்...!
-
எப்படி?
-
எதிர்த்த வீட்டுக்காரன் பல்லை சுத்தியால
உடைக்கணும்னு நினைச்சேன், முடியல...
என் மனைவி செய்த சீடையை அன்போடு
கொடுத்தேன்...காரியம் முடிஞ்சுடுச்சு..!
-
>பொன் ராஜபாண்டி