அரசியல்வாதியோட குழந்தைங்கிறது

அரசியல்வாதியோட குழந்தைங்கிறது சரியாத்தான்
இருக்கு!
-
எப்படி சொல்றே?
-
விளையாடறதுக்கு உருவ பொம்மை கேட்குதே!
-
>ஜக்கி.
-
-------------------------------------------
-
தலைவர் ஒரு அப்பாவின்னு எப்படி சொல்றே?

சில்லறை கட்சிகளை கூட்டணியிலே சேர்த்தா
பணத்தட்டுப்பாடு நீங்குமான்னு கேக்கறாரே!

>பெ.பாண்டியன்.
-
-----------------------------------------
-
கட்சி ஆபிசுக்கு எதிரே ஓட்டல் நடத்தறவனுக்கு ரொம்ப
கொழுப்பு தலைவரே!
-
ஏன்யா என்னாச்சு?
-
ஜெயில் சாப்பாடு கிடைக்கும்னு போர்டு வச்சிருக்கான்!
-
----------------------------------------

தலைவருக்கு வாஸ்து நம்பிக்கை ரொம்ப ஜாஸ்திப்பா!
-
என்ன?
-
கன்னத்துல விழுந்த ‘அறை’க்கு வாஸ்து பார்க்க
வாஸ்து நிபுணரை கூப்பிட்டு இருக்காரே!
-
-

எழுதியவர் : படித்ததில் பிடிப்பு (19-Dec-13, 12:37 pm)
பார்வை : 79

மேலே