எழுத்தறிவித்தவன் இறைவனெனில் -பொள்ளாச்சி அபி
எழுத்துத் தளமென்று
பெயர் சூடி...,
ஏகாந்தமாய் விரிந்திருக்குது
இந்தப் பல்கலைக் கழகம்..!
ஒற்றை மனிதனாய்
உள்ளே நுழைந்தவன்..
கற்றை வேலையெனினும்
தலையில் சுமந்தவன்..
நிற்காத பம்பரமாய்
தரையில் சுழன்றவன்..
தோழர் அகன் எனும்
தொழத்தக்க மாமனிதன்..!
எழுத்துப் பயணத்தில்
அவரவருக்கு ஆயிரம்
இலக்குகள்,இலட்சியங்கள்..!
வெம்மையும்,குளிருமாய்
நிறைந்திருக்கும் பாதையில்
இலக்கைத் தொட்டுவிட
தொடர்ந்து ஓடுகிறவர்களுக்கு
புத்துணர்ச்சி தரும் சோலையாய்..
சிகரங்களைத் தொடும்
ஏணியாய்..
தோழர் அகனால்
அளிக்கப்பட்டன விருதுகள்..!
எழுத்தறிவித்தவன்..
இறைவனெனில்-நம்
எழுத்தைப் பறை சாற்றியவனும்
இறைவனே..! வணங்குகிறோம்..!
மூப்பும் பிணியும்
எப்போதும் உமை
அண்டாதிருக்க வாழ்த்துகிறோம்..!