அம்மாவின் கனிவான பார்வைக்கு பணிவான வணக்கம்
அம்மாவின் கனிவான பார்வைக்கு பணிவான வணக்கம் :
தமிழ்நாடு முழுவதும் பயிலும்,பயின்று பிறகு மேல் படிப்பு படித்து,முடித்த மாணவர்கள் மொத்த எண்ணிக்கையில் 75% மேலான மாணவர்கள் தான் படித்த மற்றும் படித்து முடித்த ஆங்கிலம் சம்பந்தப்பட்ட பாடத்திட்டங்களின் ஆங்கில வார்த்தைகளுக்கு குறிப்பாக பரிட்சையில் கேட்கப்படும் கேள்விகளுக்கே அர்த்தம் தெரியாமல் தேர்வு எழுதி மற்றும் தேர்ச்சி பெற்றும் பெயரளவில் அந்த படத்தை கற்றும் பயின்றும் வருகின்றனர்..ஆனால் அயல்நாடுகள் மற்றும் அண்டை மாநிலம், ஏன் நம் மாநிலத்திலும் பெரிய, புகழ் வாய்ந்த தனியார் நிறுவனத்திலும் பணிபுரிய ஆங்கில திறன் மிக முக்கியமாக இருக்கிறது..பல்லாயிரகணக்கான கிராமம்,மற்றும் நகர்ப்புறங்களில் அரசு பள்ளி வாயிலாக படித்து, மேல் படிப்பில் பட்டம் பெற்றவர்கள் வேலையில்லாமல் இருக்க ஆங்கில திறன் பற்றாகுறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது..இன்னும் சொல்லி கொண்டே போகும் அளவிற்கு ஆங்கில திறன் குறைபாடு நிலவுவது ஒரு சமூக பின்னடைவை ஏழை மக்களிடையே உருவாக்குகிறது..ஆங்கிலம் வேண்டாம் என்று பட்டிமன்றங்களிலும், போராட்டங்களிலும் பேசுபவர்கள் பிள்ளைகள் படிப்பது ஆங்கில வழி கல்வி பள்ளிக்கூடம், வேண்டாம் என்று கூறுபவர்களின் உறவினர்கள் படிப்பது ஆங்கில வழி கல்வி..நம் அரசு பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் படிப்பது ஆங்கில வழி பள்ளிக்கூடம்...எனவே நம் நாடு வல்லரசு நாடக மாறவும், ஏழை மக்கள் வளர்ச்சியடையவும்,,மாணவர்கள் கடமைக்கு என்று மட்டும் பெயரளவில் படிக்காமல் புரிந்துணர்வுடன் படிக்க மற்று வழி மேற்கொள்ள வேண்டும்.நடைமுறை ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ் அர்த்தம் என்கிற கட்டாய பாட திட்டத்தையும் இலவச அல்லது தினம் ஒரு ருபாய் அல்லது மற்றுவழி பின்பற்றி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில அகராதி வழங்கவும் வேண்டுகிறோம்