வாலி - ஒரு நிறை குடம்

இல்லாளை இழந்ததாலா நீ
இந்நாளில் இறந்தாய் , வாலி.. நீ
இந்நாளில் இறந்ததினால் தமிழன்னை
இல்லாளாய் ஆகிவிட்டால் ...

தமிழ் மெய்யிற்கு உயிரூட்டி
அது பொய்யில்லை என்றுரைத்தாய்.
உந்தன் மெய்யின்று உயிரிழந்து
எம்முன் பொய்யாகிப் போனதுவே!!

உன் கட்டை விரல் விட்டு
எழுதுகோல் விழுந்ததினால்,
உடன்கட்டை ஏறுவதாய் எம்
அன்னை முடிவெடுத்தாள்..

வாலி நீ போனதினால், தமிழ்
தாலி இழந்து நிற்கின்றாள்..
என் செய்வோம் என் செய்வோம்
இனி எவ்வாறு கவி செய்வோம்!!

வாலி! திரும்பி வா நீ !!

எழுதியவர் : அகமுகன் விஜய் (20-Dec-13, 10:28 pm)
பார்வை : 61

மேலே