வரலாறுன்னா

வழிப்போக்கன் : ஏம்ப்பா இப்படி பிச்சை எடுக்குறதுக்கு எதாவது வேல செஞ்சு பொழைக்கலமில்ல?

பிச்சைக்காரன் : நீ எங்கைய்யா வேல செய்ற?

வழிப்போக்கன் : வங்கில வேல செய்ற ..

பிச்சைக்காரன் : சரி உங்க வங்கி தொடங்கி எத்தன வருஷம் ஆகுது?

வழிப்போக்கன் : ஒரு 200 வருஷம் இருக்கு ? ஏன் எங்க வங்கில account open பண்ண போறியா ?

பிச்சைக்காரன் : அவ்வளு காசு இருந்தா எதுக்குய்யா நான் பிச்சைஎடுக்க போறே...

வழிப்போக்கன் : பின்ன எதுக்கு கேட்ட?...

பிச்சைக்காரன் : ஒன்னோட வேலைய விட்டுட்டு வேர வேலைக்கு போறியா ?

வழிப்போக்கன் : நான் எதுக்கிய்யா வேற வேலைக்கு போகணும் ..

பிச்சைக்காரன் : உங்க வங்கி தொடங்கி 200 வருஷந்தா ஆகுது அதுல வேல செய்ற நீ வேற வேலைக்கு போன்னா போகமாட்ட 2000 வருஷத்துக்கு முன்னாடி இருந்த எங்க தொழில நான் எதுக்கிய்யா விடனும் ?

வழிப்போக்கன் : 2000 வருஷத்துக்கு முன்னாடியே பிச்சைக்காரங்க இருந்தாங்கன்னு உனக்கு யாருய்யா சொன்னங்க..

பிச்சைக்காரன் : யாருய்யா சொல்லணும் அது தான் திருவள்ளுவரே எங்கலபத்தி பாடி வெச்சிருக்காரே ? அவர் கிட்ட எங்க ஆளுங்க பிச்சை கேக்காம இருந்திருந்தா அவருக்கு எப்புடிய்யா தெரிஞ்சிருக்கும் ?

வழிப்போக்கன் : !!!!!!!!

எழுதியவர் : சாமுவேல் (22-Dec-13, 4:28 pm)
பார்வை : 162

சிறந்த நகைச்சுவைகள்

மேலே