சான்ஸ் கொடிங்கா சார்

சார் நா நல்ல பாட்வேன், நிஙகப் பட்த்லே பாட் பட்ட சான்ஸ் கொடிங்க் சார்.

சரி, ச்ரி...நான் சொல்றத நல்லா ஸ்டைலா சோல்லு பாக்கலாம்.

இளைய தளபதி

இல்ய தல்பத்

அம்பிகாபதி

அம்பிக்பத்

குண்டலகேசி

குண்டல் கேஷ்

பரவாயில்லை

பர்வயில்ல

அருமை. அர்ருமை. இந்த மாதிரி ஸ்டைலா தமிழ உச்சரிக்கற ஒரு பாடகராத்தான் நான் வல போட்டுத் தேடிட்டு இருந்தேன். இனிமே நாந் தயாரிக்கற படத்திலெ எல்லாம் நீ தாம் பாடப்போற

நந்த்ரி நந்த்ரி சார்.

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (23-Dec-13, 7:27 am)
பார்வை : 173

சிறந்த நகைச்சுவைகள்

மேலே