மனமே விளக்கு

சிட்டு குருவியும் வட்டக் கதிரவன்
தொட்டு பிடித்திட முட்டி முயலட்டும்
பட்டு துணியினில் மெத்தை விரித்திட
விட்டில் பூச்சிகள் மெத்த முயலட்டும்
கட்டி பிடித்தொரு முத்தம் கொடுத்திட
நத்தை கூட்டங்கள் மெல்ல முயலட்டும்
பட்டம் பறக்கவிடும் போட்டி அணிகளாய்
சிற்றெறும்பு கூட்டங்கள் முயன்று பார்க்கட்டும்
எங்கெங்கும் எப்பொழுதும் எந்நிலையிலும்
வெற்றி தீபத்தின் ஒளியில் நனைந்திட
மனமே விளக்கு முயற்சி திரிகள்
எண்ணமே எண்ணெய் எழுச்சிதான் பேரொளி...