மரணப்பிடி இன்றைய தமிழக அரசியல்

வேலை நிறுத்தமொன்றை
வேலையற்ற சண்டியர்கள்
ஏவற் பேய் போல் நம்மேல் இழைத்திட...
காலிப் பயல்கள் கடையை உடைத்திட....
அரசு அலுவலகத்தில் ஆயாக்கள் உறங்கிட....
பரிதவிக்கிறோம் இப்பாவ நிலையை நினைத்து....

திரையுலக பாராட்டு விழா...
அரங்கேறும் அரசியல் நாடகம்....
ஆடம்பரமாய் அரசியல்வாதியின்
குடும்ப திருமணம்.....
ஓட்டை குடிசைகளில் ஒழுகி விழும் இடி...
இது தானடா அரசியல் வாதிகளின் மரணப்பிடி...

அரசியல் சாக்கடையென
மூக்கை மூடும் இளைஞர்கள்
ரசிகர் மன்றங்களில் மூழ்கி
நடைபிணமாய் வாழ்கின்றான்....

எல்லோரும் அவர்களாகிட,
எவன் தான் நேர்மையானவன்,

ஒவ்வொரு ஓட்டிற்கும்
இவ்வளவு தான் விலையென
அற்ப பொருள் கொடுத்து
ஆட்சியை பறிக்கிறார்கள்....

ஓட்டை வாங்கிக்கொண்டு
ஓடவிட்டு அடிக்கின்றான்....

ஏமாந்த கோமாளிகலாய்,
சோளக்காட்டு பொம்மைக்கு
சொகுசான புத்தாடையென
அறிவிழந்த மடையர்க்கு
தாரை வார்த்துவிட்டோம்
தரணியை ஆளும் அதிகாரமதை...
எதிர்த்து கேட்பார் யார் இங்கு இதை....

நாம் பிறந்த மண்ணின் மீட்பிற்கு
மரணமே விலையானால்
அந்த மரணமே வாழ்வின் ஆரம்பம்
எமக்கு அதுவே.

மிருக வதை தடுப்பு சட்டமிட்டு
விலங்குகள் உயிரை மனிதனவன் காத்தான்...
உயிரையும்,உடமையும் காக்கும்
காலமது பிறக்க மனிதவதை
தடுப்பு சட்டமொன்று எப்போது
வருமென்று மனிதனவன் பார்த்தான்....

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு...
இது அன்றைய அரசியல் தத்துவம்....
வாக்கு சாவடியில்
வாக்காளர்களை சாவடி
இதுவே இன்றைய அரசியல் தத்துவம்....

எழுதவேண்டுமென்றால் எழுது.காம்
போதாது....
இக்கால அரசியலை கண்டு
எம்மக்களின் வயிறு பற்றி எறிந்து சாம்பலானது,
இக்கொடுமையை சொல்ல வந்த
என் வார்த்தைகள் கூட சாவுக்குள்ளானது....

எழுதியவர் : நா.சதிஷ்குமார் (24-Dec-13, 3:11 pm)
பார்வை : 197

மேலே