செம்மொழியாம் நம் தமிழ்மொழியாம் - நாகூர் கவி

சங்கம் பலவாயினும்
அங்கம் வகித்த
தங்கத் தமிழே... !

நல்லோர் நாவிலும்
பொல்லார் நாவிலும்
அன்னை தமிழே... !

கவிஞனுக்கு காப்பாவாய்
கவிதைகளில் யாப்பாவாய்
அன்பு தமிழே... !

இலக்கணத்தில் பாக்களாவாய்
இலக்கியத்தில் தோப்புக்களாவாய்
செந்தமிழே.. !

சீராய் பலரையும்
சிறப்பாய் செதுக்கிய
சீர் தமிழே.. !

பூக்கள் மணம்போல
குணம் கொண்ட
என் தமிழே... !

வானளந்து வைத்தாலும்
வற்றாத எழுத்தின் ஊற்றே
தலைத் தமிழே... !

அணிகள் எல்லாம்
நீ அணியும் அணிகலன்களே
அருந் தமிழே... !

சொல்லும் நீயே
பொருளும் நீயே
பழந் தமிழே...

கலையும் நீயே
கவியும் நீயே
உயிர் தமிழே... !

மெய்பேசும் உயிர் நீயே
மெய் எழுத்தே உயிர் எழுத்தே
புலவர்களின் தலை எழுத்தே... !

அவ்வைக்கு
ஆத்திச்சூடி
ஐய்யன் வள்ளுவனுக்கு
திருக்குறள்...!

அடியேன் கவிக்கு
ஒரு கவி தந்த
தமிழே நீ வாழ்க...!

எழுதியவர் : நாகூர் கவி (24-Dec-13, 10:20 pm)
பார்வை : 230

மேலே