காகித வாள் - நாகூர் கவி

வெள்ளைத்தாளில் என் கையெழுத்து
புது விடியல் தேடும் புறப்பாடு
சரியோ தவறோ என் எழுத்து
சல்லடையாய் சலிக்கும் என் ஏடு...!

கவிதை கட்டுரை
கதைகள் யாவும் பதிப்பேன்
கன்னியரை வேட்டையாடும்
கயவர்களை எழுத்தால் மிதிப்பேன்...!

கருத்து துணுக்கு
செய்திகள் தினமும் சொல்வேன்
தடைகள் ஏதும் போட்டால்
அதையும் தாண்டி செல்வேன்...!

நாட்டு நடப்பு
உண்மை யாவும் உரைப்பேன்
திருட்டு கூட்ட முகத்தை
என் பேனா மையால் கிழிப்பேன்...!

சொல்ல வந்த
செய்தியை தயங்காமல் சொல்வேன்
வெட்கமில்லா வினோதங்களை
வெள்ளைத்தாளில் வடிப்பேன்...!

எழுதியவர் : நாகூர் கவி (25-Dec-13, 2:06 am)
பார்வை : 185

மேலே