காதல் நோய்

காதல் நோய்.


உடையிலும்,
நடையிலும்,
மாற்றம்.
உற்சாகம் காணும்,
தோற்றம்.

கண்ணில் ஒரு,
காந்தம்.
கனவில் ஒரு,
சந்தம்.
எனக்கும் அவளுக்கும்,
என்ன பந்தம்?


நான்கு திசைகளையும்,
நான் திரும்பிப் பார்க்கிறேன்.
யாரும் என்னை,
பார்க்காத போதும் கூட.


எதையோ இழந்து,
தவிக்கிறேன்.
யாரையோ,
எதிர்பார்க்கிறேன்.
காகிதம் கண்டாலே,
கவிதை எழுத நினைக்கிறேன்.


முகம் பார்க்கும் கண்ணாடியும்,
முகம் மூடி வெட்கப்படும்--என்,
முகம் பார்த்து.
வீசும் காற்றும்,
விடுதலை கேட்கும்,
என் மௌனம் பார்த்து.


குறுஞ்செய்தி,
பரிமாற்றத்தின் போதுதான்,
என் விரல்களின்,
விரைவான இயக்கத்தைப்,
பார்க்கிறேன்.
தேர்வு அறையில் பார்த்ததை விடப்,
பல மடங்காக.


எங்கோ பறந்து,
எதையோ துறந்து,
எனை மறந்து சிரிக்கிறேன்,
உன்னை நினைந்து.


இயற்கை அழகை,
நேசிக்கிறேன்,
இடையிடையே உன் பெயர்,
வாசிக்கிறேன்.
இமைக்காமல் எதையோ,
யோசிக்கிறேன்.
இனியவள் அவளை,
யாசிக்கிறேன்.


உணவின் அளவு,
குறைந்தது,
கனவின் அளவு,
நிறைந்தது.


தூக்கம் போயாச்சு.
ஏக்கம் வந்தாச்சு.


இத்தனை அறிகுறிகள் தென்படும்,
இந்த நோயின் பெயர்தான் "காதல்நோய்"

எழுதியவர் : நாஞ்சில் சிவகுமார் (25-Dec-13, 7:11 pm)
Tanglish : kaadhal noy
பார்வை : 104

சிறந்த கவிதைகள்

மேலே