nanjil sivakumar - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  nanjil sivakumar
இடம்:  nagercoil
பிறந்த தேதி :  05-Feb-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Jul-2013
பார்த்தவர்கள்:  195
புள்ளி:  30

என் படைப்புகள்
nanjil sivakumar செய்திகள்
nanjil sivakumar - படைப்பு (public) அளித்துள்ளார்
17-May-2014 12:17 pm

தமிழ்காதலி

அவள்
அதிகம் பேசுவதில்லை.
ஆனால்,
அவள் கண்கள்,
அவளைவிட,
அதிகமாகவே பேசும்.
அதை மொழிப்பெயர்க்க,
அறிஞர்களுக்கும் கூட,
அதிக சிரமம்.

என் கவிதையின்,
யாப்பிலக்கணமும்,
அவள்தான்.
என் வாழ்க்கையின்,
பொருளிலக்கணமும்,
அவள்தான்.

வெல்லம் போல,
பேசினாலும் சிலசமயம்,
செல்லம் என்று கூப்பிட்டால்,
செல்லமாய் கோபித்துக்கொள்கிறாள்.

ஒவ்வொருமுறை,
அவள் கோபப்படும் போதும்,
அவளது வெட்கம்,
அந்த கோபத்தை எதிர்க்கிறது.

சைவம்,
என்றாலும்,
என்னைத் திட்டும் போது மட்டும்,
அவளுக்கு,
அசைவங்கள் பிடிக்கிறது.

இயந்திர உலகில்,
அவளொரு,
இலகுவான,
மென்பொருள்.

சுருக்கமாய் சொல்லப்போனால்

மேலும்

nanjil sivakumar - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Dec-2013 7:14 pm

ஊமைக்காதல்.

உள்ளத்தில் உள்ள,
உண்மைக்காதலை,
உன்னிடம் சொன்னால்,
உருகுலைந்து விடுமோ?
உனக்கும் எனக்குமுள்ள,
உறவு என்ற என்,
உள்ளத்தின் நெருடலால்,
உறைந்தே கிடக்கிறது, என் காதல்,
ஊமைக்காதலாய்,
உலகத்தின் கண்களுக்கு.

மேலும்

உறைந்த காதல், ஒருதலைக் காதல். வெளிப்படுத்திவிடு,காதல் நிறைவேறும்,நினைவோடு. 25-Dec-2013 7:55 pm
நல்ல வரிகள் 25-Dec-2013 7:41 pm
nanjil sivakumar - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Dec-2013 7:13 pm

இதுவும் ஒன்று.

எனக்கு,
மகிழ்ச்சி வந்தாலும்,
மரணம் வந்தாலும்-அது,
உன்னால்தான் பெண்ணே!

அவன் அவளுக்காக,
எழுதிய காதல் கவிதைகளில்,
இதுவும் ஒன்று.

மேலும்

பெண்ணே,மகிழ்ச்சியைக் கொடு.மரணத்தைக் கொடுக்காதே 25-Dec-2013 7:50 pm
நன்று 25-Dec-2013 7:42 pm
nanjil sivakumar - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Dec-2013 7:12 pm

வர்ணஜாலம்.

விரும்பாத இதயங்களை,
நெஞ்சம் மறப்பதில்லை.
விரும்பிய இதயங்களை,
நெஞ்சம் வெறுப்பதில்லை.

உன் உயிர்,
என் பெயர் சொல்லும்.
என் உயிர்,
உன் பெயர் சொல்லும்.

இரண்டு இதயங்களின்,
இடையில் என்னவோ ?

இது,
கண்கள் பேசும்,
காதல் பாடம்.
இதயங்கள் இணைக்கும்,
இனிய பாலம்.
இமைக்காமல் பார்க்கும்,
வர்ணஜாலம்.

மேலும்

நன்று 25-Dec-2013 8:01 pm
நல்ல கற்பனை. இதுவே உண்மைக் காதலுக்கு வேதம். 25-Dec-2013 7:48 pm
வண்ணமிகு வர்ணஜாலம் 25-Dec-2013 7:42 pm
மேலும்...
கருத்துகள்

மேலே