தமிழ்காதலி

தமிழ்காதலி

அவள்
அதிகம் பேசுவதில்லை.
ஆனால்,
அவள் கண்கள்,
அவளைவிட,
அதிகமாகவே பேசும்.
அதை மொழிப்பெயர்க்க,
அறிஞர்களுக்கும் கூட,
அதிக சிரமம்.

என் கவிதையின்,
யாப்பிலக்கணமும்,
அவள்தான்.
என் வாழ்க்கையின்,
பொருளிலக்கணமும்,
அவள்தான்.

வெல்லம் போல,
பேசினாலும் சிலசமயம்,
செல்லம் என்று கூப்பிட்டால்,
செல்லமாய் கோபித்துக்கொள்கிறாள்.

ஒவ்வொருமுறை,
அவள் கோபப்படும் போதும்,
அவளது வெட்கம்,
அந்த கோபத்தை எதிர்க்கிறது.

சைவம்,
என்றாலும்,
என்னைத் திட்டும் போது மட்டும்,
அவளுக்கு,
அசைவங்கள் பிடிக்கிறது.

இயந்திர உலகில்,
அவளொரு,
இலகுவான,
மென்பொருள்.

சுருக்கமாய் சொல்லப்போனால்,
அவள்,
சுவர்ண தமிழ்காதலி.

எழுதியவர் : நாஞ்சில் சிவகுமார் (17-May-14, 12:17 pm)
சேர்த்தது : nanjil sivakumar
பார்வை : 84

மேலே