நல்ல உள்ளம்

மாலை நான்கு மணி லக்ஷ்மி கல்லூரி முடிந்து தன் தோழி கலையுடன் பேருந்து நிறுத்தம் வந்தாள்.அன்றும் அங்கு நின்று கொண்டிருந்தான் குணா .லக்ஷ்மி ,பெண்மைக்குரிய அத்தனையும் அமையப்பெற்ற அழகு தேவதை . குணா அவளை மூன்று ஆண்டுகளாக காதலிக்கிறான் .
காலை பணியை முடித்து கதிரவன் ஓய்வெடுக்கச் செல்லும் ஓர் மாலை பொழுதில் முதன் முதலில் குணா லக்ஷ்மியை சந்தித்தான் . அவள் கண்களைக் கண்ட அந்த முதல் நொடியே அவன் இதயத்தை அவளிடம் தொலைத்து விட்டான் .அன்றிலிருந்து இன்று வரை அவன் லக்ஷ்மியை பின்தொடராத நாள் இல்லை. லக்ஷ்மிக்கு அவன் தன்னை பின் தொடர்வது தெரியும் இருந்தும் அவனை கண்டுகொள்ளவில்லை .இந்த மூன்று ஆண்டுகளில்
குணா எத்தனையோ முறை தன் காதலை சொல்ல நினைத்தும் அவனால் சொல்ல முடியவில்லை . ஒருவேளை அவள் மறுத்துவிட்டால் என்ன செய்வது என்று எண்ணியே தவிர்த்து வந்தான் .
எத்தனை நாள் இப்படி சொல்லாமலே இருப்பது
இன்று எப்படியாவது தன் காதலை அவளிடம் சொல்லிவிட வேண்டும் என்று தைரியத்தை வரவழைத்துகொண்டு பேருந்து நிறுத்தத்தில் அவளுக்காக காத்திருந்தான் .
வழக்கம் போல் லக்ஷ்மி தன் தோழி கலையுடன் பேருந்து நிறுத்தம் வந்தாள் .அன்று பார்த்து குணாவிற்கு வசதியாக நிறுத்தத்தில் ஆட்கள் யாரும் இல்லை .லக்ஷ்மி, கலை இருவர் மட்டுமே இருந்தனர் .குணா அவள் அருகில் சென்றான் . லக்ஷ்மிக்கு புரிந்துவிட்டது அவன் எதற்காக அருகில் வருகிறான் என்பது , இருந்தும் ஏதும் அறியாதவளாய் திரும்பிக் கொண்டாள். குணா அவள் அருகில் சற்று தயங்கிய வாரே தன்னை அறிமுகம் செய்துகொண்டான் .
குணா பொறியியல் பட்டப் படிப்பு முடித்து தனியார் அலுவலகத்தில் நல்ல சம்பளத்தில் பணிபுரிகிறான். எந்த கெட்டப் பழக்கமும் இல்லை. சிறுவயதிலே தந்தயை இழந்து தாயுடன் வசித்து வருகிறான் .தாய் சொல்லை தட்டாத பிள்ளை . லக்ஷ்மியை தவிர வேறெந்த பெண்ணையும் ஏறட்டு கூட பார்த்ததில்லை .லக்ஷ்மியின் தோழி கலை குணா வீட்டிற்கு பக்கத்துக்கு வீடு தான். ஆனால் அவள் பெயர் கலை என்பது கூட அவனுக்கு தெரியாது .
குணா தன் காதலை லக்ஷ்மியிடம் கூறினான் . அவன் இத்தனை நாள் எதற்காக தயன்கினானோ அந்த பதிலே அவளிடம் இருந்து வந்தது. குணாவின் பணிவும் அவன் மூன்றாண்டுகள் நடந்து கொண்ட விதமும் லக்ஷ்மியை கவர்ந்தது இருந்தும் அவள் மனம் காதலுக்கு இடமளிக்க மறுத்தது.ஆம் .... லக்ஷ்மி குணாவின் காதலை ஏற்க மறுத்துவிட்டாள்.
தன் மூன்றாண்டு காதல் மடிந்த வேதனையில் மனதொடிந்து திரும்பினான் . லக்ஷ்மிக்கு ஒரு மாதம் தேர்வு விடுமுறை . குணாவிற்கு லக்ஷ்மியை காண முடியாத கவலை வேறு , இரண்டும் சேர்த்து அவனை வாட்டியது . ஏதோ பறிகொடுத்தவன் போல் எப்போதும் காணப்பட்டான். அவன் நிலை கண்டு கவலையுற்ற அவன் தாய் பக்கத்துக்கு வீட்டில் கலையின் தாயிடம் இதை பற்றி புலம்பினார். கலைக்கு தெரியும் குணா ஏன் சோகமாக இருக்கிறான் என்று,இருந்தும் அதை அவள் சொல்லவில்லை . விடுமுறையில் ஒரு நாள் கலை லக்ஷ்மியை காணச் சென்றாள் .
கலை லக்ஷ்மியின் வீட்டிற்குச் சென்றாள். திண்ணையில் அவள் தந்தை வானொலியில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார். கலையை கண்டவுடன் அவளை உள்ளே வரவேற்று நலம் விசாரித்தார் .வெகு நாட்களுக்கு பின் கலையை கண்டதில் லக்ஷ்மிக்கு அளவில்லா மகிழ்ச்சி.இருவரும் அறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர் .லக்ஷ்மியின் தந்தை பத்திரிகை வசிக்க தன் கண்ணாடியை தேடினார்.
அறையில் கலை லக்ஷ்மியிடம் குணாவின் நிலையை பற்றி கூறினாள்.குணாவின் நிலைக்காக லக்ஷ்மி வருந்தினாள். கலை அவளிடம்," குணா மிகவும் நல்லவர் ,உன்னை மனமார காதலிக்கிறார் நீயும் அவரை ஏற்றுகொள் லக்ஷ்மி ",என்றாள்.
அதற்க்கு லக்ஷ்மி "உனக்கே தெரியும் என் தந்தையை , அவர் எல்லோரையும் போல் அல்ல ஒரு மாற்றுத்திறனாளி ,இருந்தும் என் விருப்பத்தை தட்டிக்களித்ததில்லை. சிறு வயதில் இருந்தே நான் கேட்டதை மறுக்காமல் எனக்கு கொடுத்துள்ளார் . என் வாழ்க்கை துணையாய் அவர் யாரை தேர்ந்தெடுத்தாலும் அவரை மறுக்காமல் ஏற்றுக்கொள்வதே நான் அவர்க்கு செய்யும் நன்றி கடன் . அவர் மரியாதைக்கு கேடு நேரும் எந்த செயலையும் நான் செய்ய மாட்டேன் ", என்றாள் .
தன் கண்ணாடியை தேடி வந்த லக்ஷ்மியின் தந்தை அவள் பேசியதை கேட்டார்.தன் மகளை நினைத்து மனதிற்குள் பெருமை பட்டுக்கொண்டார்.
கலை அவர்களிடம் இருந்து விடை பெற்றுக்கொண்டு வீடு திரும்பினாள்.


மறுநாள்

மறுநாள் காலை பத்து மணி இருக்கும் குணா அவர் தாயுடன் லக்ஷ்மி வீட்டிற்கு வந்தார் . லக்ஷ்மி அவர்களை வரவேற்பதா வேண்டாமா என்று திகைத்து நின்றாள் .வீட்டிற்குள் இருந்து வந்த தந்தை அவர்கள் இருவரையும் வரவேற்றார் . அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது . குணாவிற்கும்
லக்ஷ்மிக்கும் திருமணத்திற்கு நல்ல நாள் பார்த்து விட்டு அவர்கள் சென்றனர் . அது வரை லக்ஷ்மிக்கு அதிர்ச்சி குறைய வில்லை . அவள் தன் தந்தையிடம் இதை பற்றி கேட்க வந்தாள் .அவள் தொடங்குவதற்குள் அவர் ,"உன் விருப்பமே என் விருப்பம் ,அதற்க்கு மாறாய் எதுவும் செய்ய மாட்டேன் என்றார் ". விழிகளில் கண்ணீருடன் தன் தந்தையை தழுவிக் கொண்டாள் .




நமக்காகவே நம்மைப் பற்றியே சிந்திப்பவர்கள் நம் பெறோர் மட்டுமே .நம் விருப்பத்தை அவர்கள் நிராகரிக்க மாட்டார்கள் ,ஏற்றுக்கொள்ள காலதாமதம் ஆகும் அவளவு தான். அவர்களுக்கு மரியாதை குறைவு ஏற்படும் விதத்தில் நாம் எந்த செயலும் செய்யக் கூடாது ...

எழுதியவர் : பிரியா மணி (25-Dec-13, 8:55 pm)
Tanglish : nalla ullam
பார்வை : 300

மேலே