கணவனை இழந்த கீதா
ஒரு வீட்டில் கணவனும்,(ஜீவா ) மனைவியும்(கீதா) மிக சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். இவர்கள் வாழும் வாழ்க்கைக்கு அழகாய் ஒரு பெண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தைக்கு தர்ஷினி என்று பெயர் வைத்தனர்.....இப்படியாகவை சந்தோஷத்தில் பல வருடங்கள் போனது....ஒருநாள்
இருவருக்கும் கல்யாண நாள் வந்தது .ஜீவா கீதாவுக்கு தெரியாமல் ஏதாவது எடுத்து,கீதாவுக்கு கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான் ........ அதுபோல கல்யாண நாளிற்கு முதநாள் கீதாவிற்கு எதாவது வாங்க வேண்டும் என எண்ணி கொண்டு , கடைக்கு சென்றான் .....
கீதா மனதில் கற்பனைகளோடும் , சந்தோசத்தோடும் எதிர் பார்த்து காத்து கொண்டிருந்தாள் .. ... ....
ஜீவா ஆசையோடு ஒரு பட்டு புடவை எடுத்து விட்டு வந்து கொண்டிருந்தான் .....வரும் வழியில் ஜீவாவுக்கு நெஞ்சு வலி வந்தது . இருந்தாலும் ஜீவா நடந்து கொண்டே இருந்தான். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு வலி அதிகரித்து ஜீவா அங்கே மயங்கி விழுந்தான் ....
கீதாவிற்கு ஒரு phone வந்தது . எடுத்து பார்த்தாள்....
ஹலோ ....அம்மா இந்த மொபைல் வச்சிருந்தவருக்கு உடம்பு சரியில்லை லக்ஷ்மி மருத்துவமனையில் சேர்த்துருக்கேன் சீக்கிரம் வாங்க என்று சொல்லி போனை கட் பண்ணிட்டார் ....
கீதா அழுதுகொண்டே மருத்துவமனை நோக்கி தன் குழந்தையும் கையில் வைத்து கொண்டு புறப்பட்டாள்....
அழுதுகொண்டே என் கணவனை எங்க ? என்று கேட்டு கொண்டே மருத்துவமனையில் உள் நுழைந்தால் .......
கீதாவின் அருகில் ஒருவர் வந்தார் . அம்மா உங்கள பார்கவே பாவமாக இருக்கிறது ....உன் கணவர் நெஞ்சுவலியால் துடித்து கொண்டிருந்தார் நான் அவரை இங்க கொண்டு வருவதற்குள் அவர் இறந்து விட்டார் ....அவர் கையில் இந்த பை வைத்திருந்தார் என்று கீதாவிடம் சோகத்தோடு கொடுத்தார் .....
கீதா வாங்கி அந்த பையை திறந்து பார்த்தாள் ஒரு பட்டு புடவையும் , கொஞ்சம் மல்லிகை பூவும் இருந்தது ....அதை கண்ட கீதா அழுது கொண்டே மயங்கி கீழே விழுந்தாள்....
கருத்து : வாழ்கை என்பது எப்போ , எப்படி , நம்மை விட்டு போகும் என்று யாராலும் சொல்ல முடியாது ......ஆனால்
வாழும் ஒவ்வொரு நிமிடங்களையும் ரசித்து கொண்டே வாழவேண்டும்