காதலென்னும் சோலையினில்29

ராஜலெக்ஷ்மியும் கவிதாவும் உள்ளே போகும் போது தாரா வெளியே வந்து கொண்டிருந்தாள்.


தாராவை பார்த்ததும் கவிதாவுக்கு எரிச்சலும் கோவமுமாக இருந்தது அதை ராஜலெக்ஷ்மியும் கவனிக்க தவறவில்லை.


இவர்களின் பக்கத்தில் வந்த தாரா என்ன இந்த பக்கம் என்று கேட்க;
ராஜலெக்ஷ்மியோ ஹலோ இது நாங்க கேட்கவேண்டிய கேள்விஇது எங்க பேக்டரி நாங்க எப்போது வேணும்னாலும் வரலாம் போகலாம் நீ எங்க இந்த பக்கம் என்றாள் ராஜலெட்சுமி.


நான் அத்தானை பார்க்க வந்தேன் உன்கிட்ட சொல்லணும்னு அவசியம் இல்லை என்று பதிலுக்கு தாராவும் கலாய்த்து விட்டு........
என்னடி நீ கண்டவ முன்னாடி என்னை insult பண்ற என்று கேட்டாள்.


உடனே கவிதாவை பார்த்துவிட்டு அவள் கையை பற்றிய ராஜலெஷ்மி இது கண்டவ இல்ல என் அண்ணி இந்த பேக்டரிக்கு முதலாளி என்றாள் (சிரிப்புடன்.......)


உடனே தாரா அங்கிருந்து கோவமாக செல்ல இவர்கள் இருவரும் ராஜாவின் அறைக்குள் சென்றனர்.......


இவர்கள் இருவரையும் பார்த்த ராஜாவுக்கு வியர்த்துக்கொட்டியது; அதை வெளிக்காட்டாமல் நீ... நீங்க என்ன இந்த பக்கம் என்று இழுத்து விட்டு ஷாப்பிங் எல்லாம் முடிஞ்சிடிச்சா என்று தட்டுதடுமாறி கேட்டான்.


ஆமா அண்ணா! எல்லாம் முடிசிட்டு தான் வரோம் என்று பதில் கூறினாள் ராஜலெஷ்மி ஏன் அண்ணா தாரா இங்கு வந்திட்டு போகிறாள்!என்று கவிதா மனதில் நினைத்த கேள்வியை இவள் கேட்டு விட்டாள்.


அவள் பார்த்தீங்களா அது ஒ.... ஒண்ணுமில்ல சும்மாதான் வந்தாள் என்று சமாளித்தான்.


(கவிதா மனதிற்குள்.... சும்மா வந்தவள் சும்மா போகவேண்டியது தானே வம்பையும் இழுத்துட்டு இல்ல போறா, அவள் சும்மா வந்தாள் என்றால் இவருக்கு ஏன் பதில் சொல்ல முடியாத அளவுக்கு வியர்த்துக்கொட்டுகிறது என்று நினைத்தவள் ராஜாவின் அடுத்த வார்த்தையால் சுய நினைவுக்கு வந்தாள்........)


அண்ணியை அழைத்து பேக்டரிய சுற்றி காட்டுனியா என்று ராஜா கேட்க ராஜலெக்ஷ்மி பதில் சொல்வதற்குள் எல்லாத்தையும் பார்த்துவிட்டு தான் வருகிறோம் என்று கவிதா பதில் கூறினாள் குத்தலாக தாராவை வைத்து.........


சரி டீ குடித்துவிட்டு போகலாம் என்று இருவரையும் அழைத்து tea shop க்கு சென்றான்.


கவிதாவின் முகத்தையே உற்று பார்த்துக்கொண்டிருந்தான் ராஜா ஆனால் அவள் பார்வையோ வேறு திசையில் இருந்தது.........


அண்ணா நீங்க பண்றது கொஞ்சம் கூட சரி இல்லை என்றாள் தங்கை அவன் சற்று அதிர்ச்சியோடு பார்த்து என்னம்மா என்ன சொல்ற என்று கேட்டான்; பின்ன என்ன அண்ணா அண்ணிக்கு நம்ம family பற்றியோ பேக்டரி பற்றியோ எதுவும் சொல்லலியா பாவம் அவங்களுக்கு எதுவுமே தெரியல என்றாள்..........


இதான் பிரச்சனையா இன்று all details ம் நீ சொல்லி கொடுத்திடு இப்போ கிளம்பலாமா என்று சொல்லி இருவரையும் அனுப்பி வைத்து விட்டு இவன் பேக்டரிக்குள் சென்றான்........



தனது அறையில் வந்தவன் நாற்காலியில் சாய்ந்தான்.............
எப்படியோ ராஜலெக்ஷ்மியையும் கவியையும் ஒன்று சேர்த்துவிட்டோம் இப்பொழுது தாராவை என்ன சொல்லி சமாளிப்பது கவிதாவை எப்படி நம் வழிக்கு கொண்டு வருவது என்ற யோசனையில் அப்படியே கண் முடினான்................






தொடரும்

எழுதியவர் : (26-Dec-13, 2:51 pm)
பார்வை : 261

மேலே