மாலை நேரத்து மயக்கம்4
ஒரு ஐந்து மாதங்களுக்கு முன்பு , அவள் என் வாழ்க்கையில் அறிமுகமான இந்த ஒரு வாரந்தில் ஒரு இதமான மாலையில் , பிரகாஷோடு (நெருங்கிய நண்பன், உடன் வேலை செய்பவன் , நானும் அவளும் பின் நாட்களில் சந்தித்துக் கொண்ட அறை இவனுடையது) வழக்கமாக வந்து சாப்பிடும் பேக்கரியில் அமர்ந்திருந்த போது , இப்படி தொடங்கினேன் :
" டேய் , நான் அவ வீட்டை கண்டுபிடிச்சிட்டேன்டா "
" நீ பலப்பேரை பாக்கற யாருடா இவ புதுசா "
"டேய்லியும் இந்த தெரு வழிய போவளே. டிரெயினிங் டீச்சர் , ரோஸ் கலர் சாரியில "
"ம்ம்ம் எப்படிடா "
" அதா ?".
.
சில்லறை கொடுத்து விட்டு அவசரமாக அவனை அழைத்துக்கொண்டு கிளம்பினேன். அவளை போன வாரத்திலிருந்து தெரியும். தினமும் பார்க்கிறேன். சில நாள்கள் பின் தொடர்ந்திருக்கேன். யோசித்து அவளை காதலிக்கலாம் யென முடிவு செய்யவில்லை. எப்படியோ என்னையறியமால் அவளை தேர்ந்தெடுத்திருந்தேன். ஒல்லியான தேகம் கொண்ட வெளுத்த பேரழகி அவள்.
.
பேக்கரி ஒட்டிய இந்த தெருவில் சென்று , ஒரு கட்டில் நுழைந்தால் நான்காவது வீடு, பழைய பெரிய ஓட்டு வீடு தான். கம்பௌன்ட் சுவர் ஒட்டி ஒரு ஆளுயர நித்திய கல்யாணி செடி , பச்சை நிற கேட்டை கடந்தால் திண்ணை , பின் நீளும் பெரிய நான்கு அறைகள் கொண்டது. வீட்டின் வெளியே இணையும் இன்னோரு தெருவை பிடித்தால் சாலைக்கும் பின் பேக்கரிக்கு வந்து விடலாம்.
.
முதல் முறை அந்த தெருவில் போகையில் , அவள் வீட்டு முன் அறையில் பளீச் சென டியூப்லைட் ஏறிந்தது. வீட்டில் யாரும் இருப்பதாக தெரியவில்லை. மறுபடியும் வரும் போது , வண்டியை பிரகாஷிடம் கொடுத்தேன். அவள் வீட்டில் மெரூன் கலர் சுடிதார் போட்ட பெண் ஒருவள் திண்ணையில் யாரோ ஒரு சின்ன பையனோடு விளையாடிக்கொண்டிருந்தாள். வறண்ட கேசம் , கொண்டை அணிந்திருந்தாள் . அழகாகவும் , எந்த வித ஒப்பனைகளும் அற்று இருந்தாள். அதே ஒரு அழகாகவும் , சட்டென்று அந்த பார்வை என்னை சந்தித்தது. அவளே தான். சில நொடிகளில் கடந்து விட்ட அவளை , அவளால் என் தேகம் பரபரப்பானது. "அவ பார்த்துத்துட்டா டா" என்றேன். அந்த நாளின் பயன் எப்போதைக்கும் முடியாத அந்த வார்த்தை.
.
" ஒகே பார்த்தது போது கம்முனு கிளம்பலாம் டா " பிரகாஷ் சொன்னான்.
-தொடரும் . . .
Part-5