மாலை நேரத்து மயக்கம்3

கை கழுவியதை அவள் சேலை முந்தானையிலே துடைந்தேன்.
" டேய் ப்ரண்ட்ஸ் பார்த்து ஓட்டுவாங்க டா" என்றாள்.
.
கிளம்பலாம் என்றாள். சந்தியாவோடு போய் மணமகளிடம் சொல்லி விட்டு வந்தாள். கிளம்புகையில் , அவள் அப்பா விடமிருந்து போன் வந்தது. என்னை அமைதியாக இருக்க சொல்லி விட்டு , போனில் சீக்கிரம் வந்து விடுவதாக சொன்னாள். நிறுத்தம் நோக்கி நடந்தோம். அதே இருட்டு . . .
" இப்படியே எத்தனை நாளைக்கு , உன் வீட்டுல தெரிஞ்சா கல்யாணம் " தொடர்ந்தேன் .
" நடக்கும் நம்பு " என்றாள்.
" யேய் இது டேய்லி நா சொல்றது "
" ஆமா . எனக்கென்னமோ நடக்கும் னு தோணுது " என்றாள்.
" ம்ம்ம் " என்றேன்.
.
நிறுத்ததில் நல்ல கூட்டம் . கூட்டமாக வந்த இரண்டு பஸ்களை விட்டோம். அடுத்த பேருந்திலும் கூட்டம் . பொறுப்புப்படுத்தி ஏறினோம். நான் பின் படியில் ஏறி , நடு பஸ் வரை வர முடிந்தது. விமலா ஒரு இடத்தை பிடித்து நின்ற படி அடிக்கடி திரும்பி பார்த்தாள்.
.
பஸ் நிலையத்தில் இறங்கி நடந்தோம். பல வண்ண கட்டிடங்கள் , மொபைல் ஷாப்கள் , பேன்ஷி ஸ்டோர்கள் , பேக்கரிகள் , ஹோட்டல்கள் , ஜெராக்ஸ் கடைகள் தாண்டி அவள் தெருவை அடைந்த போது , போக சொன்னாள் .
" சந்தியா வுக்கு பாதுகாப்பா அவ வீடு வரை " என்றேன்.
" அதெல்லாம் எங்களுக்கு தெரியும். நீ கிளம்பு டா"
" யேண்டி இப்புடி விரட்டற"
" டேய் யாரவது பார்த்தற போறாங்க ப்ளீஸ் கிளம்பு " என்றாள்.
" ஒகே போறேன் "
ஒரு பார்வை பார்த்தாள்.
" நாளைக்கு பார்க்கலாம் அவளை " சந்தியா சொன்னாள்.
" ஒகே நோ ப்ராபளம் " என்றேன்.
.
சந்தியாவும் அவளும் எதோ பேசிக்கொண்டே நடந்து சென்றார்கள். அவளோடைய பேச்சு சப்தமே ஒரு காதல் போதையை ஏற்படுத்துவதாக இருந்தது.
.
நான் வீடு அடையும் முன்பே , அவளிடமிருந்து sms வந்தது. முத்தங்களையும் , காதலையும் சேர்த்து வைத்து அனுப்பினாள். உடனே போன் பண்ணினேன். கட் செய்தாள். " உங்கிட்ட sms இல்லை னு தெரியும். அம்மா இருக்கங்கா இப்ப பேச முடியாது குட் நைட் . திஸ் ஃடே இஸ் குட் ஃடே இன் மை லைஃப் " யென அனுப்பியிருந்தாள். மெதுவாக வீட்டுக்கு நடந்தேன்.
.
பிரியமானவர்களோடு விழாக்களில் பங்கேற்று , பின் தனிமைப்படும் போது பெரிய இழப்பாக தோன்றும். நண்பனின் திருமணத்தில் நண்பர்களோடு பங்கேற்ற போது இதை உணர்ந்திருக்கேன். இந்த கொண்டட்டாங்கள் எல்லாம் வேண்டாம் . பொய். அவள் ஒருத்தி மட்டும் போதும் எப்பவுமே யென மனநிலை தோன்றியது.
-தொடரும் . .
Part-4

எழுதியவர் : m.palani samy (25-Dec-13, 5:52 pm)
பார்வை : 186

மேலே