வளர் பிறை-25

ஜோதியின் தாய் ஒரு பூசாரியிடம் ஜோதியின் நிலைப் பற்றி கூற சென்றார்,,,,,, மறுபுறம் குணசேகரன் ரகுவை(ரவி) பார்க்க வேண்டுமே என துடித்து கொண்டிருந்தார்

அவர் மகளின் நிலை அவரை யோசிக்க வைத்தது,,,, இருப்பினும் மனதை மாற்றிக்கொண்டு ரகு(ரவி)வை தேடி போக ஆயத்தமானார்

அவர் ரகு(ரவி) இடம் வந்து சேர்ந்தார்,,, இவரின் வருகைக்காக ரகு(ரவி),,, கணேஷ் இருவரும் காத்திருந்தனர்,,,

தூரத்தில் குணசேகரனின் வருகையை பார்த்ததும் ரவி தன் திட்டத்தை அரங்கேற்ற ஆரம்பித்தான்

பாசாங்காக கணேஷை ஒரு நாற்காலியில் கட்டினான்,,,, அவன் கையில் ஒரு துப்பாக்கி தயாராக வைத்திருந்தான்,,, பக்கத்து அறையில் ரகு

"வாங்க"- அழைத்தான்

"இந்த பாவிய புடிச்சிட்டீங்களா தம்பி"- மனதளவில் சந்தோஷ பட்டு கொண்டார் குணசேகரன்

"சரி தம்பி இவங்கள என்ன செய்ய போறீங்க"

"முதல இவனை நம்ம எடத்துக்கு கொண்டு போகணும் அப்புறம் நாம என்ன செய்யலான்னு முடிவு பண்ணலாம்"

"சரி தம்பி"

"உங்களுக்கு வண்டி ஓட்ட தெரியுமா??"

"தெரியுமே"

"சரி நீங்க வண்டிய எடுங்க நான் இவனை ஒரு சாக்கு மூட்டைல கட்டி தூக்கிட்டு வரேன்"

"சரி தம்பி"- என்றவாறு சுமோ சாவியை வாங்கி கொண்டு போனார் குணசேகரன்

ரகு(ரவி) ஒரு சாக்கு மூடியை எடுத்து கணேஷ்க்கு பதில் அதில் ரகுவை வைத்து கட்டினான்,,,, ரகு மயங்கிய நிலையில் இருந்தான்


அவனை வண்டியின் டிக்கியில் வைத்தான்,,, வண்டியின் பின் சீட்டில் பதுங்கி இருந்தான் கணேஷ்

வண்டி செல்ல ஆரம்பித்தது,,,,,,,,,,,,,,


மறுபுறம் மகளின் நிலையை கோவிலில் இருந்த பூசாரியிடம் சொல்லி அவரை வீட்டிற்கு அழைத்து கொண்டு வந்தார் ஜோதியின் அம்மா

"வாங்க சாமி,,, என் பொண்ண காப்பாத்துங்க"- பூசாரியை அழைத்தாள் ஜோதியின் அம்மா

அவர்கள் வீடு வந்த சேர்ந்த நேரம்,,,,, எங்கும் நிசப்த்தம்,,,,,,, வானில் நிலா பௌர்ணமியாக பளிச்சிட்டது

ஜோதியின் அலறல் அங்கு இல்லை,,,,,,

வீட்டிற்கு வந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை,,, ஜோதியின் அம்மா ஜோதியை தேட ஆரம்பித்தார்

"ஜோதி அம்மா ஜோதி,,,,,,,"ஒவ்வொரு அறையாக தேடினார்

"எங்க போன நீ,,,,,,, உன்ன தான் எங்கெல்லாம் தேடுறது,,,,,,,நான் வேற ரகு தம்பிய பாக்க போனும்,,,, ஆமா ஜோதி எங்க??"- கேட்டவாறு வந்து நின்றார் குணசேகரன்

(வளரும்.,,,,,,,,,,,,,,)

எழுதியவர் : நிலா மகள் (25-Dec-13, 3:49 pm)
பார்வை : 142

மேலே