பிச்சை
பசிக்கு அழும் குழந்தை பசியாற்ற
பாலுக்கு காசு கேட்கும் அன்னை
பார்த்ததும் பதைத்ததே என் உள்ளம்
பத்து ரூபாய் கொடுத்து அனுப்பினேன்
பத்து நிமிடம் கழிந்த பின்னே
கேட்டது மீண்டும் குழந்தையின் அழுகுரல்
பக்கத்தில் நின்றவரிடம் கைநீட்டும் அன்னை
பார்த்தேன் பசியாறவில்லை பச்சிளம் குழந்தை
என்னை கண்டதும் விலகிச் சென்றாள்
அவள் பார்வை உணர்த்தி சென்றது
நான் கொடுத்த பணம் குழந்தையின் பசியாற்றவல்ல
எவனோ உழைப்பின்றி தின்று கொழிக்க...
என்று பசிதீரும் அந்த குழந்தைக்கு???
மாறுமா நமது பேருந்து நிலையங்கள் ?....

